‘கர்ப்பகாலத்தில் இப்படி தான் இருக்க வேண்டும்’ – தனது ரீல்ஸ் மூலம் அட்வைஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா வெண்பா!!

0

பாரதி கண்ணம்மா  சீரியலில் தற்போது வில்லியாக  நடிக்கும்  வெண்பா  தற்போது  கர்ப்பமாக  இருக்கும்  நிலையில் புதிய  ரீல்ஸ்  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த  ரீல்ஸ் விடியோவை பார்த்த  பலரும் அவரை  பாராட்டியுள்ளனர்.

பாரதி  கண்ணம்மா  வெண்பா 

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணமே வெண்பா   தான். ஆரம்பத்தில் இருந்து பாரதியின் மேல் உள்ள காதலால் பல வில்லத்தனமான வேலைகளை பார்த்து  வருகிறார். கண்ணம்மாவையும் ஹேமாவையும் பிரித்து 8 வருடங்களாக பாரதியை திருமணம் செய்ய  போராடி  வருகிறார்.

அனாலும் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மேலும் ஹேமாவை கடத்தும்  அளவிற்கு சென்று  விட்டார். இதனால்  ஹேமா  உயிருக்கு  போராடும்  நிலைக்கு  சென்று  விட்டார். சீரியலில் இந்த  அளவிற்கு புகழ் கிடைத்ததே வெண்பா  கதாபாத்திரத்தால்  தான்.

வெண்பாவின்  அந்த  கியூட்டான  நடிப்பும்  அவரது  அழகும்  அனைவரையும்  ரசிக்க  வைத்தது. முதலில்  பரீனா சன்  டிவி சீரியலில்  நடித்தவர் அதன்  பிறகு  தொகுப்பாளினியாகவும்  பணிபுரிந்தார். சன் டிவியில்  சமையல் நிகழ்ச்சியை   தொகுத்து  வழங்கிய  அவருக்கு பாரதி  கண்ணம்மா  வாய்ப்பு  கிடைத்தது.

இந்த  வருடத்தில்  சிறந்த  வில்லி  என்ற  விஜய்  டெலிவிஷன் அவார்ட்டையும்  தட்டி  சென்றார். இது  தனது 8 வருட  போராட்டத்திற்கு கிடைத்த  பலன்  என்றும்  சொல்லி  இருந்தார். இந்நிலையில்  மேலும்  ஒரு  சந்தோஷமான  செய்தி  ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில்  தான் தற்போது கர்ப்பகாலத்தில்  இதையெல்லாம்  நினைத்து  கவலைப்பட  கூடாது  என்று  அனைவர்க்கும்  உணர்த்தும்  வகையில்  ரீல்ஸ்  செய்துள்ளார். இதனை  பார்த்த  பலரும்  அவரை  பாராட்டியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here