பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் முதல் சீரியல் இதுதானா?? அதுவும் இந்த சேனலிலா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பயங்கர வில்லியாக நடிக்கும் வெண்பா நடித்த முதல் சீரியல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்ப்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் யார் என்று கேட்டால் அது வெண்பா தான். ஏனெனில் தனது வில்லத்தனமான கதாபாத்திரத்தால் சீரியலை நாளுக்கு நாள் ஸ்வாரஸ்யமாக்கி வருகிறார்.

முதலில் பாரதியின் முன்னாள் காதலி ஹேமாவையே கொலை செய்தார். பிறகு கண்ணம்மா கர்ப்பமாக இருக்கிறார் என்று கூட பார்க்காமல் பாரதி மேல் இருக்கும் முரட்டுத்தனமான காதலால் அவரையும் கொலை செய்யும் அளவிற்கு சென்று விட்டார்.

barathi kannama

துர்கா வந்து தொடர்ந்து கண்ணம்மாவை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் பாரதி அமெரிக்காவிற்கு செல்ல கூடாது என்பதற்காக ஹேமாவை கடத்தும் அளவிற்கு சென்று விட்டார். மேலும் இந்த பழி கண்ணம்மா மீது சுமத்தபடுகிறது. எப்படியோ சௌந்தர்யா தான் இந்த தடவையும் வந்து கண்ணம்மாவை காப்பாற்றுகிறார்.

இப்படி சீரியலை பரபரப்பாகவே கொண்டு செல்லும் வெண்பாவிற்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றனர். தற்போது வெண்பா நடித்த முதல் சீரியலான அழகியில் எடுத்த புகைப்படங்கள் யாவும் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here