நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கும் பாரதி கண்ணம்மா பரீனா – குவியும் வாழ்த்துக்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரமே வெண்பா தான். ஏனெனில் அவரால் தான் இவ்வளவு பிரச்சனையே. ஆரம்பத்தில் இருந்தே வெண்பா தனது ஆட்டத்தை காட்ட அதில் சிக்கிக்கொண்டது கண்ணம்மாவும் பாரதியும் தான்.

barathi kannama
barathi kannama

பாரதி மேல் இருந்த அதிகப்படியான காதலால் அவரை அடைந்தே தீருவேன் என்று திரிகிறார். கண்ணம்மாவை கொலை செய்யும் அளவிற்கு சென்று விட்டார். இவரால் தான் கதையில் இவ்வளவு சுவாரஸ்யமே. அதன் பிறகு மக்கள் மத்தியிலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

இவரின் பேச்சை நம்பி பாரதி கண்ணம்மாவை வீட்டை விட்டே துரத்தி விட்டார். இன்னும் பல பிரச்சனைகளை கண்ணம்மா சந்தித்தும் வருகிறார். இப்படி தான் வில்லத்தனத்தால் பிரபலமடைந்தவர் பரீனா. தற்போது அவர் நீண்ட நாள் மறைத்து வைத்திருந்த ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதாவது தற்போது பரீனா நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கிறார். தற்போது அவருக்கு 5 மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here