பாரதி கண்ணம்மா அப்டேட் – வெண்பாவிடம் காலில் விழாத குறையாக கெஞ்சும் கண்ணம்மா! ஹேமா பற்றிய உண்மையை தெரிந்து கொள்வாரா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நாளுக்கு நாள் விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் விறுவிறுப்பான காட்சிகள் நடந்து கொண்டு வருகிறது. கண்ணம்மாவிற்கு ஹேமா பற்றிய உண்மை கிட்ட தட்ட தெரிந்து விட்டது. ஆனால் சௌந்தர்யா ஹேமா அனாதை ஆசிரமத்தில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை தான் என்று சாதிக்கிறார்.

ஆனால் கண்ணம்மா அதனை கொஞ்சம் கூட நம்புவதாக இல்லை. தனக்கு பிறந்த இன்னொரு குழந்தை எங்கு உள்ளது என்று நினைத்து அலைமோதுகிறார். இப்படி சீரியல் முன்பை விட சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. எப்படியும் சில மாதங்களில் பாரதிக்கு உண்மை தெரிந்து விடும் என்பது போல தான் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வெண்பா வேகமாக சென்று கொண்டிருக்க அப்பொழுது கண்ணம்மாவும் பின்னாடியே வந்து கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் வெண்பாவோ அதனை கண்டுகொள்ளாமல் நடந்து செல்கிறார்.

இதை வைத்து பார்க்கும்போது கண்ணம்மா ஹேமா பற்றிய உண்மை தெரிந்துகொள்ள தான் இப்படி கெஞ்சிக்கொண்டே செல்கிறாரோ?? என்ற சந்தேகம் அனைவர்க்கும் எழுந்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பாப்போம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here