‘பாரதிகிட்ட இருக்க குழந்தை யாருனு கண்டுபிடிச்சு உன் முகத்திரையை கிழிக்கிறேன் ‘ – வெண்பாவிடம் சவால் விடும் துர்கா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் முதன்முதலாக லட்சுமி ஹேமா படிக்கும் ஸ்கூலுக்கு செல்கிறார். இதனால் கண்ணம்மாவுக்கு சந்தோஷமாகிறது. மேலும் துர்கா வெண்பாவை மீண்டும் மிரட்டி விட்டு செல்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதியும், கண்ணம்மாவும் இரவு முழுவதும் நம் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கு என்று மாறி மாறி யோசிக்கின்றனர். இனிமேல் அவள் மூஞ்சிலேயே முழிக்க கூடாது என்று பாரதியும், அவன் நிழலையே தொடக்கூடாது என்று கண்ணம்மாவும் கோவத்தில் கொந்தளிக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் லட்சுமி முதன்முதலாக புது ஸ்கூலுக்கு செல்கிறார். அதற்காக துளசி லக்ஷ்மியை கிளப்பிக்கொண்டுள்ளார். கண்ணம்மா வழக்கம் போல தனது அட்வைஸ் மழையை பொழிய லட்சுமி கிண்டலடிக்க ஆரம்பிக்கிறார். அடுத்ததாக லட்சுமியிடம் நான் உன்னோட அம்மா என்று யாரிடமும் சொல்ல கூடாது என்று கூறுகிறார்.

அதற்கு லக்ஷ்மியும் ஒத்துக்கொள்கிறார். அடுத்து சௌந்தர்யாவை காட்ட லட்சுமி இன்று ஸ்கூலுக்கு வருவதை நினைத்து சந்தோஷமாகிறார். அடுத்து ஹேமாவும், பாரதியும் ஸ்கூலுக்கு கிளம்புகின்றனர். லக்ஷ்மிக்கு தன் கையால் ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும் என்று கூறிவிட்டு செல்கிறார்.

இனியா சினிமாவிற்கு சென்றதை கோபி, பாக்யாவிடம் சொல்லிவிடும் ஹெட் மாஸ்டர் – விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி கதைக்களம்!!

இதனால் சௌந்தர்யா சந்தோஷமாகிறார். அடுத்ததாக துர்கா ரீஎன்ட்ரி கொடுக்கிறார். வெண்பா வீட்டிற்கு துர்கா வருகிறார். துர்காவை பார்த்து வெண்பா ஷாக்காகிறார். தான் பாரதியும், ஹேமாவையும் பார்த்ததாக சொல்கிறார். ஹேமா கண்ணம்மாவை உரித்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.

பாரதியும், கண்ணம்மாவும் எப்படியும் ஒரு நாள் உண்மை தெரிந்து ஒன்று சேருவார்கள் என்று கூறுகிறார். அடுத்து ஹேமா பாரதியின் தத்து குழந்தை என்று சொல்ல அதனை நம்ப மறுக்கிறார். சரி துர்காவை சமாதானம் செய்வோம் என்று நினைத்து கையை பிடிக்கிறார்.

உதறி விடுகிறார். கண்ணம்மாவையும் பாரதியும் சேர்த்து வைப்பதாகவும், பாரதியிடம் இருக்கும் குழந்தை யார் என்று கண்டுபிடிப்பதாகவும் சொல்கிறார். அடுத்ததாக லக்ஷ்மியை அழைத்து சென்று சாமி கும்புடுகிறார். அப்பொழுது வெண்பா வீட்டில் வேலை பார்க்கும் பெண் வெண்பா பாரதி பெயருக்கு அர்ச்சனை செய்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here