‘ஹேமாவை இப்படியே விட்டா கோமா ஸ்டேஜ்க்கு போயிடுவாங்க’ – டாக்டரின் பதிலால் அதிரும் பாரதி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி வலுக்கட்டாயமாக ஹேமாவை அழைத்து கொண்டு அமெரிக்கா செல்ல அதன் விளைவாக ஹேமாவிற்கு மறுபடியும் ஃபிக்ஸ் வருகிறது. இதனால் குடும்பமே பதறி போயுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணாம் சீரியலில் கண்ணம்மா ஹேமாவை நினைத்து புலம்பி கொண்டுள்ளார். ஹேமா மீது தனக்கு இருக்கும் இனம் புரியாத ஒரு பாசத்தை பற்றி துளசியிடம் சொல்கிறார். ஹேமாவும் தன்னை விட்டு எப்படி இருக்க போகிறாள் என்று பிதற்றுகிறார்.

ஒரு தடவையாவது ஹேமாவை பார்த்தால் நிம்மதியாக இருக்கும் என்று சொல்ல துளசி ஹேமாவை பார்க்க வீட்டிற்க்கு போக சொல்கிறார். இதுதான் சரி என கண்ணம்மா வேகமாக செல்ல அதற்குள் அனைவரும் ஏர்போர்ட்டுக்கு கிளம்பி விடுகின்றனர்.

மறுபடியும் வீட்டிற்கு வந்து விடுகிறார். அடுத்ததாக காரில் பிரியா பாரதி செய்யும் தவறை சுட்டி காட்டுகிறார். ஹேமாவின் நிலமையையாவது புரிந்து நடந்து கொள் என்று சொல்கிறார். ஆனால் எதையும் பாரதி கேட்பதாக இல்லை. ஹேமாவை எப்படி படிக்க வைத்து கொண்டு வருவேன் மட்டும் எல்லாரும் பாருங்க என்று சொல்ல ஹேமாவிற்கு தலை சுற்றுகிறது.

பாரதி எதார்த்தமாக திரும்பி பார்க்க ஹேமாவிற்கு மீண்டும் வலிப்பு வருகிறது. இதனை பார்த்து பிரியா பதறுகிறார். இப்படியே போனால் கோமா ஸ்டேஜ்க்கு போக கூட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார். சௌந்தர்யா என்ன நடக்குது என்று அங்கு வர ஹேமா இருக்கும் நிலையை பார்த்து கதறுகிறார்.

ஹேமாவுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா உங்கள சும்மா விட மாட்டேன் என்று கத்துகிறார். ஹேமாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல ஐசியுவில் அனுமதிக்கின்றனர். பாரதி ஹேமாவிற்கு என்ன ஆகுமோ என்று கதறி அழுகிறார். சௌந்தர்யா எவ்வளவோ சமாதானம் செய்ய பாரதி கதறி அழுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here