ஏய் சித்ரா ஓடாதே.., கண்ணம்மா குறித்த உண்மை தெரியும் தருணம்.., பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து கொண்டிருக்கும் சித்ராவிற்கு பாரதி மீது காதல் வர அதனை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார். தன்னால் எந்த பிரச்சனையும் அந்த குடும்பத்திற்கு வர கூடாது என்று அமைதியாக இருக்கிறார் கண்ணம்மா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இன்னொரு பக்கம் சௌந்தர்யாவை தீர்த்து கட்ட வெண்பா குடும்பம் போட்ட திட்டத்தில் வெண்பாவே சிக்கி கொண்டார். இப்படி இருக்க இப்பொழுது கண்ணம்மாவின் தங்கை திருமணம் விமர்சையாக நடந்து வருகிறது.

கண்ணம்மா எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்து வருகிறார். இப்படி இருக்க சித்ரா வசமாக சிக்கிக்கொள்ளும் ஆபத்து நடக்க உள்ளது.  தனது மாமாவை மண்டபத்தில் பார்த்து விடுகிறார்.

அவரும் பார்த்து விட சித்ரா என்று கத்தி கொண்டே துரத்துகிறார். சித்ரா அவரிடம் இருந்து தப்பிக்க, ஒளிந்து கொள்கிறார். ஆனாலும் அவரது மாமா கண்டுபிடித்து விடுகிறார். இந்த ப்ரோமோ இப்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் சித்ரா மாட்டிக்கொள்ளும் தருணம் வருமா?? எப்படி தப்பிக்க போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here