Saturday, April 10, 2021

‘ஹேமா கண்ணம்மாவ அப்படியே உரிச்சு வச்சுருக்கா’ – வெண்பாவிடம் விஷயம் தெரியாமல் உளறிய துர்கா!!

Must Read

பாரதி கண்ணம்மா சீரியலில் துர்கா ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் வெண்பாவிற்கு எதிராக பல காரியங்களை செய்து வந்தார். மேலும் நேற்றைய எபிசோடில் பாரதியையும், ஹேமாவையும் பார்த்த துர்கா கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து விட்டதாக நினைத்து கொள்கிறார். இதனை வெண்பாவிடமே உளறி கொட்டுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தையை எபிசோடில் கண்ணம்மாவை போலவே அனைவர்க்கும் உதவி செய்யும் மனப்பக்குவத்தை ஹேமாவிடம் பார்க்க முடிந்தது. பாரதிக்கும் கண்ணம்மாவுடன் சென்று ரோட்டில் இருப்பவர்களுக்கு பெட்ஷீட் கொடுத்தது நியாபகத்திற்கு வருகிறது. அடுத்ததாக இதனை தூரத்தில் இருந்து பார்த்த துர்கா கண்ணம்மாவின் குழந்தை தான் ஹேமா என்று நினைத்துக் கொள்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் ஹேமாவும் சௌந்தர்யாவும் தூங்கிக் கொண்டிருக்க ஹேமாவுக்கு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறார். சௌந்தர்யாவை எழுப்பி கதை சொல்ல சொல்ல அவரும் கண்ணம்மா கதையை வேறு விதமாக சொல்கிறார். அப்படியே ஹேமாவும் தூங்கி விடுகிறார். அதன் பின் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் இருந்து ஹேமாவை பிரித்ததற்காக அழுகிறார்.

கண்ணம்மாவை போலவே அதே இரக்கம், அடுத்தவர்களுக்கு உதவும் தன்மை அனைத்தும் ஹேமாவிற்கும் உள்ளதை நினைத்து அழுகிறார். அடுத்ததாக துர்காவை காட்ட ஹாஸ்பிடலுக்கு வருபவர்களுக்கு என்ன மருந்து தருவது என்று தெரியாமல் திணறிக்கொண்டுள்ளார். மேலும் ஒரு ஷீட்டில் எழுதி கொடுத்து எதிரில் இருக்கும் ஹாஸ்பிடலில் இருப்பது என் பொண்டாட்டி தான் துர்கா கொடுத்தேன்னு சொல்லுங்க என்று அனுப்பி விடுகிறார்.

விராட் கோஹ்லி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு !!

இதனால் காண்டாகும் வெண்பா அனைவரையும் வெளியே அனுப்புகிறார். துர்காவே ஹாஸ்பிடலுக்கு வர வெண்பாவை கிண்டல் செய்கிறார். அதன் பிறகு வெண்பாவிடம் நேற்று பாரதியையும் ஹேமாவையும் பார்த்த விஷயத்தை சொல்லி கண்ணம்மா போவே ஹேமா உரித்து வைத்திருப்பதாக சொல்கிறார். இது வெண்பாவிற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அப்போ துர்காவிற்கு இது தெரிந்திருக்கிறது.

கண்டிப்பாக டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார். அடுத்ததாக கண்ணம்மா வீட்டில் ஒரு சாட்டில் குறைந்த விலைக்கு துணிகள் தைத்து தரப்படும் என்று எழுத அதற்கு லட்சுமி இது சரி வராது என்று கூறுகிறார். அதாவது நாம் கிராமத்தில் இருந்தோம், அங்கிருக்கும் செலவுக்கு அந்த பணம் சரிப்பட்டு வந்தது, ஆனால் இது பெரிய சிட்டி இது அதிக விலைக்கு தைத்தால் தான் பிழைக்க முடியும் என்று கூற துளசியும், கண்ணம்மாவும் ஆச்சரியப்படுகின்றனர்.

அடுத்ததாக லட்சுமி கண்ணம்மாவிடம் அப்பா ஊரிலிருந்து வந்தால் நம்மை எங்கு தேடுவார். நாம் இங்கு இருப்பது எப்படி தெரியும் என்று சொல்ல கண்ணம்மாவிற்கு என்னவோ போல ஆகிறது. அடுத்ததாக அப்பாவை பற்றி லட்சுமி ஏக்கமாக பேச கண்ணம்மாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தல நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாலினி உடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தல ரசிகர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -