பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா?? அதுவும் ரோஷினி இவ்வளவா??

0

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த சீரியலில் நடிகர்கள் அனைவரும் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்ற விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தான் விஜய் டிவியில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய நபர்களும் மேலும் பல புதுமுகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது சௌந்தர்யா, வேணு போன்றோர் எல்லாம் பிரபல நடிகர்களாக நடித்தவர்கள்.

வெள்ளித்திரையில் மின்னியதற்கு பிறகு தான் அவர்கள் இந்த சீரியலில் களமிறங்கியுள்ளனர். அதே போல கண்ணம்மா, பாரதி, அஞ்சலி போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் சீரியலுக்கு புது முகம் தான். ஆனாலும் இந்த புது முகங்களை வைத்தே இயக்குனர் சீரியலை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த பாரதி கண்ணம்மா தெலுங்கு சீரியலான கார்த்திகை தீபம் சீரியலின் ரீமேக் தான். ஆனாலும் சீரியலுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகமாகி வருகிறது. எப்பொழுது கண்ணம்மாவிற்கு உண்மை தெரியவரும், வெண்பாவின் முகத்திரை எப்பொழுது கிழியும் என்று எதிர்ப்பது கொண்டுள்ளனர்.

இப்படி சீரியல் ஒரு பக்கம் நகர்ந்து கொண்டிருக்க தற்போது அதில் நடிக்கும் நடிகர்கள் சம்பளம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரூபா ஸ்ரீ- ரூ. 16, 000, ரிஷி கேசவ்- ரூ. 14, 000, பரீனா- ரூ. 15, 000, ரோஷினி- ரூ. 20,000, அருண் பிரசாத்- ரூ. 20,000, கண்மணி- ரூ. 12,000, அகிலன்- ரூ. 10,000 வாங்குவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here