ஹேமாவை கடத்தியதாக கண்ணம்மா மீது கம்பளைண்ட் கொடுக்கும் பாரதி – ஜெயிலுக்கு செல்லும் கண்ணம்மாவை காப்பாற்றப்போவது யார்??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு கண்ணம்மா தான் இத்தனை நாட்கள் ஹேமாவிற்கு சாப்பாடு கொண்டு வந்தது என்ற உண்மை தெரிய வருகிறது. இதனால் கதைக்களமே மாறும் அளவிற்கு சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது.

ஏனெனில் கண்ணம்மா எப்படியும் ஹேமாவை மயக்கி தன் கைக்குள் போட்டு விடுவாரோ என்ற பயம் வேறு. இதனால் நாட்டை விட்டே வெளியேற முடிவெடுத்து விட்டார் பாரதி. யார் பேச்சையும் கேட்பதாகவும் இல்லை.

இந்நிலையில் பாரதி ஹேமாவை வெளியே கூடி கொண்டு போக திடீரென ஹேமாவிற்கு விக்கல் எடுக்கிறது. இதனால் காரில் ஹேமாவை விட்டுவிட்டு கடைக்கு செல்கிறார். அப்பொழுது கண்ணம்மா அந்த பக்கம் செல்ல ஹேமா அதனை பார்த்து சமையல் அம்மா என்று ஓடுகிறார்.

அப்பொழுது ஒரு கும்பல் ஹேமாவை கடத்தி செல்கிறது. திரும்பி வந்து பாரதி பார்க்க ஹேமா இல்லாததை பார்த்து ஷாக்காகிறார். அப்பொழுது கண்ணம்மா ஆட்டோவில் ஏறுவதை பார்த்து கண்ணம்மா தான் ஹேமாவை அழைத்து சென்றதாக நினைத்து போலீசிற்கு செல்கிறார்.

கண்ணம்மா மீது கம்ளைண்ட் தருகிறார். இதனால் போலீஸ் கண்ணம்மாவை அரெஸ்ட் செய்து அழைத்து செல்கின்றனர். ஹேமாவை கண்டிப்பாக வெண்பா தான் கடத்தியிருக்க வேண்டும் என்பது மட்டும் தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here