ஹேமாவின் நிலை அறிந்து கண்ணம்மாவிடம் அழைத்து செல்லும் பாரதி – மனம் மாறுவாரா?? கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா கடத்தப்பட்டதை அடுத்து தொடர்ந்து பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற உள்ளது. அதனை இந்த பதிவில் காணலாம்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தெலுங்கில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் ரீமேக் தான் என்பது அனைவர்க்கும் தெரியும். அந்த சீரியலை வைத்து பாரதி கண்ணம்மாவில் அடுத்து என்ன நடக்கபோகிறது என்பது என்று பாப்போம். அதாவது கண்ணம்மா மேல் தற்போது பழி சுமத்தப்பட்டதால் அவரே ஹேமாவை கண்டுபிடிக்க செல்கிறார்.

இதனால் அவருக்கு அடிபடுகிறது. மேலும் கண்ணம்மா தலையில் அடிபட்டிருப்பது போலவும், ஹாஸ்பிடலில் இருப்பது போலவும் புகைப்படம் வெளியானது. இந்நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டது ஹேமா தான்.

இதிலிருந்து மீண்டு வந்ததத்திற்கு பிறகும் ஹேமாவால் கண்ணம்மாவை பிரிந்து இருக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். டாக்டரிடமும் அழைத்து சென்று காட்ட ஹேமாவின் நிலை மோசமாக தான் செல்கிறது. வேறு வழியில்லாமல் கண்ணம்மாவிடம் அழைத்து செல்கிறார்.

தன் மகள் என்றே தெரியாமல் அரவணைக்கிறார் கண்ணம்மா. பாரதிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் ஹேமாவை கண்ணம்மாவிடம் செல்ல அனுமதிக்கிறார். கார்த்திகை தீபம் சீரியலில் இந்த சீன்கள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்த அப்டேட்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here