பாரதி கண்ணம்மாவில் வெண்பா கலந்துகொள்ளும் எபிசோடு?? எப்பொழுது தெரியுமா??

0

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இப்படி இருக்க தற்போது பரீனா எப்பொழுது சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதியும் கண்ணம்மாவும் இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். எப்பொழுது இருவரும் ஒன்று சேருவர்கள் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். வெண்பாவின் எந்த தலையீடும் இல்லாமல் சீரியல் ஒரு விறுவிறுப்பு இல்லாமல் ஓடி கொண்டுள்ளது.

 

வெண்பாவாக நடிக்கும் பரீனாவிற்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருக்கு பெயர் சூட்டும் விழா அண்மையில் தான் நடைபெற்றது. இப்படி இருக்க தற்போது சில நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வருகிறார். மேலும் இவர் எப்பொழுது பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் கால் எடுத்து வைக்க போகிறார் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர்.

இப்படி இருக்க தற்போது செய்தி ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதாவது பரீனா ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்பொழுது அந்த எபிசோடுகள் அடுத்த இரண்டு வாரங்களில் ஒளிபரப்பாகும் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here