‘சமையல் அம்மா என்னோட அம்மா’ – கண்ணம்மாவிற்காக அடித்துக்கொள்ளும் ஹேமா, லட்சுமி!!

0

விஜய் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா மற்றும் லட்சுமி இடையே பேச்சு வார்த்தை அதிகமாகி கடைசியில் சண்டையில் முடிகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவும் சாந்தியும் பேசிகொண்டுள்ளனர். சாந்தி வெண்பாவிடம் பாரதியை கைக்குள் போட்டுக்கொள்ளும் படி கூறுகிறார். மேலும் ஹேமா தான் பாரதியின் வீக்னஸ். மகளுக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று சொல்கிறார்.

barathi kannamma
barathi kannamma

மேலும் கண்ணம்மாவை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று ஹேமா சொன்னால் சரி என்று அழைத்து வந்து விட்டால் என்ன செய்வது என்று கேட்கிறார். இதனால் கோவமடையும் வெண்பா சாந்தியை அடித்து விடுகிறார். அடுத்ததாக பாரதி ஹேமாவை நினைத்து புலம்பி கொண்டுள்ளார். எப்படியும் இரவில் தன்னை தேடுவாள் என்று ஹேமாவின் காலுக்காக காத்து கொண்டுள்ளார்.

மேலும் சௌந்தர்யாவும் வேணுவும் ஏசி இல்லாததால் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். அப்பொழுது வந்து பாரதி ரிமோட்டை கொடுக்கிறார். நீங்க கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்கிறார். அப்பொழுது யாரும் பார்க்காத விதமாக சௌந்தர்யாவின் செல் போனை எடுத்து செல்கிறார்.

இதனை சௌந்தர்யா பார்த்து விடுகிறார். பாரதி சென்றவுடன் இதனை வேணுவிடம் சொல்கிறார். கண்ணம்மா நம்பரை கேட்க தங்கிக்கொண்டு இப்படி எடுத்து செல்கிறான் என்று சொல்லி சந்தோசப்படுகின்றனர். அடுத்ததாக லட்சுமி ஹேமா ஸ்டாரை பார்த்து ரசித்து கொண்டுள்ளனர்.

அதன் பிறகு படுக்க செல்ல கண்ணம்மா பக்கத்தில் யார் படுப்பது என்ற சண்டை வருகிறது. லட்சுமி நான் தான் சமையல் அம்மா பக்கத்தில் படுப்பேன் என்று சொல்கிறார். ஹேமா அது என்னோட சமையல் அம்மா என்று சொல்கிறார். இதனால் சண்டை முத்தி இருவரும் அடித்து கொள்கின்றனர்.

கடைசியில் வந்து கண்ணம்மா சமாதானம் செய்கிறார். இருவருக்கும் நடுவில் தான் படுத்து கொள்வதாக சொல்கிறார். மேலும் கதை சொல்லும்படி ஹேமா கேட்க கண்ணம்மா சிங்கத்தின் கதையை சொல்ல இருவரும் தூங்கி விடுகின்றனர். அடுத்ததாக பாரதி கால் செய்ய அத்தை என்று நினைத்து எடுத்து பேசுகிறார். ஆனால் பேசுவது பாரதி என்று தெரிந்ததும் அமைதியாகிறார். பாரதி ஹேமாவை பற்றி விசாரிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here