கண்ணம்மா ஹேமா மீது மட்டும் பாசம் காட்டுவதால் கோவத்தில் கொந்தளிக்கும் லட்சுமி! வெண்பாவை அடிக்க சென்ற பாரதி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வெண்பாவிடம் சென்று வழக்கம் போல புலம்ப அவரை மேலும் ஏற்றி விடுகிறார். மேலும் கண்ணம்மா ஹேமா மீது காட்டும் அன்பை பார்த்து லட்சுமி கடுப்பாகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கண்ணம்மா வீட்டில் தங்கி இருப்பதை தெரிந்து வெண்பா கோவமடைகிறார். எப்போ பாத்தாலும் ஹேமா தானா?? உன்ன பிடிக்காம சமையல் அம்மா தான் முக்கியம்னு அங்க போயிட்டா, அவளுக்காக இவளோ பண்ற அப்போ அவ கண்ணம்மா கூட வாழுனு சொன்ன அவ கூட வாழுவியா?? என்று சொல்கிறார்.

இதனால் கோவமடையும் பாரதி வெண்பாவை திட்டி விட்டு செல்கிறார். மேலும் கோபத்துடன் பாரதி வீட்டிற்கு வர அனைத்து ரூம்களிலும் உள்ள ஏசி ரிமோட்டை எடுக்கிறார். கண்ணம்மா வீட்டில் ஹேமா இவ்வளவு கஷ்டப்படும் போது நீங்க மட்டும் ஏசில இருப்பிங்களா?? என்று சொல்லி எடுத்து செல்கிறார்.

பாரதியின் இந்த செயலை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். அடுத்ததாக கண்ணம்மா வீட்டை காட்ட கண்ணம்மா தாயம் விளையாடுகிறார். ஹேமாவும் கண்ணம்மாவும் ஒரு டீமாக இருக்கின்றனர். துளசியும் லக்ஷ்மியும் ஒரு டீமாக இருக்கின்றனர்.

இது லக்ஷ்மிக்கு மிகவும் கோவமாகிறது. மேலும் கண்ணம்மா ஹேமாவை ஊக்கிவித்துக்கொண்டே இருக்க லக்ஷ்மிக்கு மேலும் கோவத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தாயக்கட்டையை தள்ளிவிட்டு கோவமாக செல்கிறார். அடுத்ததாக மாடியில் வெயில் போனதும் தண்ணீர் ஊற்றி கழுவி விடுகிறார்.

பாய் போட்டு அங்கு அமர கண்ணம்மா வடை சுட்டு எடுத்து வருகிறார். மேலும் அதனை ஹேமாவிற்கு ஊட்டி விடுகிறார். லட்சுமிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. தனக்கும் அம்மா ஊட்டுவார் என்று நினைத்து கொண்டிருக்க லக்ஷ்மிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

மேலும் எரிந்து விழுகிறார். ஹேமாவுக்கு நீங்க ஊட்டி விடுவதால் நான் ஒன்னும் கோவப்படல என்று மூஞ்சியில் அடித்தார் போல சொல்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here