பாரதி கண்ணம்மா அப்டேட் – ஹேமாவை கிட்டத்தட்ட நெருங்கி விடும் பாரதி! கண்ணம்மா செய்யப்போவது என்ன??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா இருக்கும் இடத்தை கிட்டத்தட்ட நெருங்கி விட்டார் பாரதி. இந்நிலையில் பல விறுவிறுப்பான காட்சிகளும் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மா 

ரௌடிகளிடம் இருந்து தப்பித்து சென்ற ஹேமா வீட்டிற்கு வலி தெரியாமல் எங்கு செல்வது என்று தெரியாமலும் முழித்து கொண்டுள்ளார். மேலும் பசி வேறு எடுக்க ஓரிடத்தில் அமர்ந்து விடுகிறார். கண்ணை சற்று மூட ரௌடிகள் கடத்தியது நியாபகத்திற்கு வருகிறது.

எப்படியாவது வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று பதறுகிறார். ரோடில் சென்ற ஒருவரிடம் போன் வாங்கி பாரதிக்கு கால் செய்கிறார். ஆனால் பாரதி வேறு ஒரு காலில் பிசியாக இருக்க அதற்குள் அந்த பெண் போனை வணங்கி விட்டு செல்கிறார்.

பாரதிக்கு கண்ணம்மா தான் எப்படியும் ஹேமாவை கடத்தி இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தவறாகவே யோசிக்கிறார். அப்பொழுது யாரோ தனக்கு கால் செய்தது நியாபகத்திற்கு வர அதற்கு மீண்டும் கால் செய்கிறார்.

அப்பொழுது ஒரு 10 வயது பெண் தனக்கு கால் செய்ததாகவும் தான் அங்கிருந்து வந்து விட்டதாகவும் சொல்கிறார். பாரதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த இடத்தில் பார்த்தீர்கள் என்று கேட்க அந்த அட்ரஸை கொடுக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here