துர்காவிடம் இருந்து தப்பிக்க பாரதி வீட்டில் லெட்டர் எழுதி தூக்கி போடும் வெண்பா – தப்பிப்பாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மாவில் துர்கா வெண்பாவை கடத்தியதை அடுத்து இன்றைய எபிசோடில் வெண்பா தப்பித்து போக முயற்சிக்கிறார். அதனை துர்கா கண்டு பிடித்தும் விடுகிறார். இதனால் வெண்பாவின் நிலை என்ன ஆகும்?? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவும், லக்ஷ்மியும் பாரதியின் காரில் வருகின்றனர். இதனை கண்ணம்மா பார்த்து விடுகிறார். இது பார்க்க சந்தோசமாக இருந்தாலும் பாரதி தன்னை பார்த்து விடுவாரோ என்று ஒளிந்து கொள்கிறார். ஆட்டோ டிரைவர் குமாரை விட்டு லக்ஷ்மியை அழைக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதியிடம் லட்சுமி தான் இங்கேயே இறங்கிக்கொள்வதாக சொல்கிறார். அடுத்து இந்த காரில் சென்றது தனக்கு சந்தோசாக இருந்ததாகவும் சொல்கிறார். அடுத்து சௌந்தர்யா ஹேமா லட்சுமிகாக ஒரே கலர் டிரஸ் எடுத்துக்கொண்டு வருகிறார். கண்ணம்மாவையும் ஹேமாவையும் பிரித்தது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாகவும் சொல்கிறார்.

இந்த டிரஸை லட்சுமியை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அடுத்ததாக கண்ணம்மா லட்சுமி காரில் வந்ததை நினைத்து கவலை படுகிறார். பாரதிக்கு உண்மை தெரியவந்தால் லட்சுமியை என்ன பேசுவரோ என்று பயப்படுகிறார். எத்தனை நாட்கள் இப்படி ஒளிந்து வாழ்வது என்று நினைக்கிறார். அடுத்ததாக லக்ஷ்மிக்கு ஊட்டி விடுகிறார்.

ஐபிஎல் விதிமுறையை மீறிய ‘கிங்’ கோஹ்லி – ரூ.12 லட்சம் அபராதம்!!

அப்பொழுது கீழ் வீட்டில் இருந்து மஞ்சு வருகிறார். அவருக்கும் சேர்த்து ஊட்டி விடுகிறார். அடுத்ததாக சௌந்தர்யா பாரதியை நினைத்து புலம்புகிறார். இவனுக்கு என்னைக்கு புரியவச்சு ஒன்னு சேக்குறது என்று அகிலனிடம் கூறுகிறார். என்னைக்காவது ஒருநாள் உண்மை வெளிவர தான் செய்யும். அப்போ பாரதி கண்டிப்பா திருந்துவான் என்று அகிலன் ஆறுதலளிக்கிறார்.

அடுத்து வெண்பாவை காட்டுகின்றனர். வெண்பா எப்படியோ கஷ்டப்பட்டு கட்டை அவிழ்க்கிறார். பாரதி வீட்டின் பின்னால் இருந்து காப்பாத்துங்க என்று கத்துகிறார். அடுத்ததாக ஒரு பேப்பரில் யாரோ தன்னை கடத்தி இருப்பதாக எழுதி கீழே தூக்கி போட அது சரியாக துர்கா மீது விழுகிறது. மேலே வரும் துர்காவை பார்த்து வெண்பா ஷாக்காகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here