‘இனி கண்ணம்மாவ அம்மானு தான் கூப்பிடனும்’ – உண்மையை உளறிய சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று எதிர்பாராத விதமாக பாரதி வீட்டிற்கு வர அனைவரும் ஷாக் ஆகின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் பாரதியை மாடிக்கு அனுப்புகிறார் சௌந்தர்யா. தற்போது பாரதி கண்ணில் இருந்து கண்ணம்மா தப்பிப்பாரா?? இல்லையா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா பாரதி வீட்டில் இருக்கிறார். அனைவரும் வந்து வந்து பேசினாலும் கண்ணம்மா யாருக்கும் முகம் கொடுத்து பேசுவதாக இல்லை. மறுபுறம் லட்சுமி அம்மா எப்பொழுது வருவார் என்று தனியாக காத்துக்கொண்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக கண்ணம்மா ரவா லட்டு செய்துக்கொண்டிருக்க சௌந்தர்யா அங்கு வருகிறார். கண்ணம்மாவிற்கு ஊட்டி விடுகிறார். அதனை ஏற்க மறுக்கும் கண்ணம்மா திரும்பி கொள்கிறார். மேலும் என்ன மேடம் இதெல்லாம் என்று கேட்க கோவமடையும் சௌந்தர்யா யாரை பார்த்து மேடம்னு கூப்டுற என்று மிரட்டுகிறார்.

அதன் பிறகு அத்தை என்று கண்ணம்மா ஆசையாக அழைக்க சௌந்தர்யா கண்கலங்குகிறார். இத்தனை வருடங்களாக கண்ணம்மா எங்கிருக்கிறார்?? என்ன செய்கிறார்?? என்றே தெரியாமல் இருக்க இந்நிலையில் தற்போது வீடு தேடியே வந்திருக்கும் கண்ணம்மாவை எப்படி இங்கேயே தங்க வைப்பது என்று தவித்து கொண்டுள்ளார் சௌந்தர்யா.

தமிழக சட்டமன்ற தேர்தல் – மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!!

இப்படி பல பாச போராட்டங்கள் பாரதி வீட்டில் நடந்துகொண்டுள்ளது. பாரதியை பார்த்து மறுபடியும் கண்ணம்மா கோவமடைகிறார். என்ன பொய் சொல்லி வெளியே அனுப்பிட்டு வெண்பா கூட சந்தோசமா வாழுறான் என்று திட்டுகிறார். அடுத்ததாக கண்ணம்மா வீட்டிற்கு கிளம்ப தயாராக ஹேமா அவரை மேலே அழைத்து வருகிறார்.

சௌந்தர்யா புடவையில் பணத்தை ஒளித்து வைத்து கொடுக்க அந்த புடவையை வாங்க மறுக்கிறார். இதனால் கோவமடையும் சௌந்தர்யா கண்ணம்மாவை கண்டபடி திட்டுகிறார். ‘உன் மனசுல அப்படி என்ன நெனச்சுட்டு இருக்க’ என்று சொல்ல கண்ணம்மா அதனை தனது முந்தானையில் வாங்கி கொள்கிறார். அடுத்தாக சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு குங்குமம் வைத்து விடுகிறார். ஹேமா சமையல் ஆன்ட்டி என்று அழைக்க சௌந்தர்யா அவரை அம்மா என்று அழைக்க சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here