‘எங்கடி உன்னோடு இன்னொரு புருஷன் வருண், கூப்பிடு அவனை’ – கண்ணம்மாவை கண்டபடி கிழிக்கும் பாரதி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பாரதி இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டிற்கு வந்து கண்டபடி பேசி விடுகிறார். மேலும் வெண்பாவை திருமணம் செய்து கொள்வதாகவும் சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஆட்டோக்காரர் அந்த ரிப்போர்ட்டை பாரதியிடம் சென்று கொடுக்கிறார். பாரதி அதனை திறந்து பார்க்கும் முன்பே வெண்பா இங்கு வந்து விட ரிப்போர்ட்டை வாங்கி விடுகிறார். வீட்டில் கண்ணம்மாவிடம் ஆட்டோ டிரைவர் வந்து பாரதியை பற்றி புகழ்ந்து தள்ளுகிறார்.

லட்சுமியிடம் மிக எதார்த்தமாக பழகுகிறார். இதற்கெல்லாம் ஒரு மனசு வேணும் என்று சொல்ல கண்ணம்மாவிற்கு கோவம் வருகிறது. அடுத்ததாக சௌந்தர்யா கோவில் பிரசாதத்தை எடுத்து கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். லக்ஷ்மியை பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஆனால் அதனை கண்ணம்மா ஒத்துக்கொள்ளவில்லை. அவள் 1008 கேள்வி கேட்பா என்னால பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார். இதனால் கோவமடையும் சௌந்தர்யா நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்குறதுக்கு அங்க வந்துடு என்று சொல்கிறார்.

எல்லா சொத்தும் உனக்கும் என் பேத்திக்கு தான் என்று சொல்கிறார். மேலும் லட்சுமியை மட்டும் வீட்டுக்கு அனுப்பு அவள் வசதியா வாழட்டும் என்று சொல்கிறார். ஆனால் சித்தி கொடுமை என்ன மாதிரி அவள் அனுபவிக்க வேண்டாம் என்று சொல்கிறார் கண்ணம்மா.

இதனால் சௌந்தர்யா குழப்பமடைகிறது. என்ன என்று கேட்கிறார். அப்பொழுது வெண்பாவிற்கு உங்க பையனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுல என்று சொல்கிறார். அப்பொழுது பார்த்து பாரதி வீட்டிற்கு வர ஆமாம் எனக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு என்று சொல்ல சௌந்தர்யா பாரதியை திட்டுகிறார்.

கண்ணம்மா பாரதிக்கு சாபம் விட அதற்கு பாரதி நல்லவங்க சாபமே பழிக்காது உன்ன மாதிரி இருக்குறவளுங்க சாபம் எப்படி பலிக்கும். உன் இன்னொரு புருஷன் வருண் எங்க இருக்கான். கூப்டு அவனை என்று பாரதி கத்த சௌந்தர்யா கன்னத்தை சேர்த்து அறைகிறார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

மேலும் நீ இப்படி பட்டவனு தெரிஞ்சு இருந்தால் கருவுலையே உன்னை கலைச்சு இருப்பேன் என்று சொல்கிறார். நீ திருந்துவனு நெனச்சா கொஞ்சம் கூட மாற மாட்டேங்குற என்று சொல்கிறார். என்று கண்டபடி திட்டுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here