சமையல் அம்மா தான் லட்சுமியின் அம்மா என்று தெரிந்துகொள்ளும் ஹேமா – அதிர்ச்சியில் சௌந்தர்யா குடும்பம்!!

0
சமையல் அம்மா தான் லட்சுமியின் அம்மா என்று தெரிந்துகொள்ளும் ஹேமா - அதிர்ச்சியில் சௌந்தர்யா குடும்பம்!!
சமையல் அம்மா தான் லட்சுமியின் அம்மா என்று தெரிந்துகொள்ளும் ஹேமா - அதிர்ச்சியில் சௌந்தர்யா குடும்பம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா தான் லட்சுமியின் அம்மா என்ற உண்மை ஹேமாவிற்கு தெரிய வருகிறது. மேலும் ஹேமாவை பார்த்தாலே கண்ணம்மாவிற்கு ஒரு தனிப்பட்ட உணர்வு ஏற்படுகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி ஹேமா மற்றும் லட்சுமிக்கு ஒரே மாதிரி டிரஸ் வாங்கி கொண்டு வருகிறார். இதனை கொடுக்க ஹேமாவும் அகிலனும் கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்கின்றனர். ஹேமாவை பார்த்ததும் கண்ணம்மாவிற்கு ஏகப்பட்ட சந்தோசம்.

சமையல் அம்மா தான் லட்சுமியின் அம்மா என்று தெரிந்துகொள்ளும் ஹேமா - அதிர்ச்சியில் சௌந்தர்யா குடும்பம்!!
சமையல் அம்மா தான் லட்சுமியின் அம்மா என்று தெரிந்துகொள்ளும் ஹேமா – அதிர்ச்சியில் சௌந்தர்யா குடும்பம்!!

லட்சுமிக்கு டிரஸ் வாங்கி வந்ததாக சொல்கிறார். அந்த ட்ரெஸ்ஸை இருவரும் போட்டு பார்க்க உள்ளே செல்கின்றனர். அப்பொழுது கண்ணம்மா அகிலனிடம் ஹேமா என்னுடைய குழந்தைதானே.. உண்மையை சொல்.. என்று கேட்கிறார். அகிலன் பதில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டுள்ளார்.

மேலும் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று முழித்து கொண்டிருக்க அப்பொழுது பார்த்து ஹேமா லட்சுமி ஒரே உடையில் வருகின்றனர். இதனை பார்த்த கண்ணம்மா ஷாக்காகிறார். ஹேமா அப்படியே என்ன மாதிரி இருக்கா, அதே மாதிரியே லட்சுமி அத்தை மாதிரி இருக்கா என்று கண்கலங்குகிறார். ஹேமாவிற்கு பிடித்த பாயசத்தை செய்து கொடுக்கிறார் கண்ணம்மா.

சமையல் அம்மா தான் லட்சுமியின் அம்மா என்று தெரிந்துகொள்ளும் ஹேமா - அதிர்ச்சியில் சௌந்தர்யா குடும்பம்!!
சமையல் அம்மா தான் லட்சுமியின் அம்மா என்று தெரிந்துகொள்ளும் ஹேமா – அதிர்ச்சியில் சௌந்தர்யா குடும்பம்!!

மேலும் லட்சுமி கண்ணம்மாவை அம்மா என்று அழைக்க அதனை பார்த்த ஹேமா ஷாக்காகிறார். சமையல் அம்மாவை நீ எதுக்கு அம்மானு கூப்டுற என்று சொல்ல கண்ணம்மா லட்சுமி தன் மகள் தான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். மேலும் பாரதிக்கு சமையல் அம்மாவை பிடிக்காது அதனால் தான் உண்மையை சொல்லவில்லை என்றும் சொல்கிறார்.

அடுத்ததாக அஞ்சலி வழக்கம் போல சோகத்தில் அமர்ந்திருக்க சௌந்தர்யா வந்து இதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று அட்வைஸ் கொடுக்கிறார். மேலும் வீட்டிற்கு வரும் ஹேமா, லட்சுமி யார் என்று தெரியுமா என்று சௌந்தர்யாவிற்கு ஷாக் கொடுக்கிறார். சமையல் அம்மாவின் மகள் தான் லட்சுமி என்று சொன்னதும் தான் அவர்களுக்கு உயிரே வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here