Wednesday, August 4, 2021

தன் புதிய படத்திற்காக கடும் உழைப்பை சிந்தும் பாரதி கண்ணம்மா பிரபலம் – அப்போ சீரியல் அவளோ தானா??

Must Read

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அகிலன் தற்போது தனது படத்திற்காக பல கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அகிலன்

பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் தனது நடிப்பால் பல ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த சீரியல் நாயகன் பாரதியை விட அகிலனுக்கு தான் ரசிகர்கள் அதிகம். தனது அண்ணிகாக அண்ணனையே எதிர்த்து பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவருக்கும் அஞ்சலிக்கும் ஜோடி பொருத்தம் ஒத்து போகவே இவர்களின் ட்ராக் தனியாக போயிக்கொண்டுள்ளது.

மேலும் வெண்பா என்ன தான் கெடுதல் வேலை செய்தாலும் அதனை ஈஸியாக கண்டுபிடித்து விடுவார் அகிலன். வீட்டில் உள்ளவர்கள் யார் நம்பினாலும் வெண்பாவை அகிலன் ஒரு பொழுதும் நம்பியது கிடையாது. வெண்பாவை எதிர்ப்பதாலேயே அகிலனை பிடித்து போனது. இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர்.

அதன் பிறகு தான் பாரதி கண்ணம்மாவில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தான் அவர் விஷாலின் புதிய படம் ஒன்றில் அவருடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் பிஸ்சா படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி அகிலனுக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அதனால் தான் அவரால் பாரதி கண்ணம்மா சீரியலில் சில நாட்களாக கலந்துகொள்ள முடியவில்லை. இப்படி இருக்க தற்போது படத்திற்காக அவர் கஷ்டப்பட்டு ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Akilan SPR (@akilan.spr)

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்த 90s கீட்ஸின் கனா காணும் காலங்கள் சீரியலின் ரகசியம்… அது என்னனு தெரியுமா???

அந்த காலத்தில்  மிகவும் வெற்றிகரமாக விஜய் டிவியில்  ஒளிபரப்பான  சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் சங்கவி என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒரு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -