பாரதி கண்ணம்மா அகிலனுக்கு இப்படி ஒரு திறமையா?? பின்னிட்டீங்க போங்க!!

0

பாரதி கண்ணம்மாவின் ஹீரோவுக்கு தம்பியாக நடிக்கும் அகிலன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பாட்டு பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அகிலனுக்கு இவ்வளவு திறமையா என்று வியந்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா அகிலன்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. திரைப்படம் போல் இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியலில் பாரதிக்கு தம்பியாக வருபவர் தான் அகிலன்.  பாரதியின் கதாபாத்திரம் அளவிற்கு இவரது கதாபாத்திரமும் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சீரியலை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது இவர் விஷாலுடன் ஓர் படத்தில் இணைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனை இவர் தனது இன்ஸ்டா பக்கம் மூலம் தெரிவித்தார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இவர் சீரியல் மூலம் பல பெண் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தினசரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறாமல் தனது புகைப்படமோ அல்லது வீடியோவையோ பதிவிட்டு லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை அள்ளி வருகிறார் அகிலன்.அந்த வகையில் அகிலன் ‘இது போதை நேரம்’ பாடலை அருமையாக பாடி அசத்தியுள்ளார். கமன்ட் லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Akilan SPR (@akilan.spr)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here