வெள்ளித்திரையில் கால்பதிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகர் – அதுவும் இந்த ஆக்சன் ஹீரோவுடனா?? அப்போ சீரியல்??

0

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் நடிக்கும் அகிலனுக்கு தற்போது படவாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா அகிலன்

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தனி ஆளாக வாழ்ந்து வரும் கண்ணம்மா தனது குழந்தையை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார். மேலும் தற்போது புது பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் என முடிவெடுகின்றனர். கடைசியில் மாவு அரைத்து விற்கலாம் என முடிவு செய்ய சௌந்தர்யா கையால் திறந்து வைக்கிறார்.

அந்த ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் எதிர்பாராத விதமாக வெண்பா துர்காவையே அடித்து விட்டு தப்பித்து விட்டார். இப்படி வெண்பா பேச்சையே நம்பிக்கொண்டிருக்கும் பாரதியை பலரும் வெறுத்து தான் வருகின்றனர். ஆனால் பாரதிக்கு தம்பியாக நடிக்கும் அகிலனுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். பாரதியை விட அகிலனை தான் ரசிகர்களுக்கு பிடித்தும் போனது. ஏனெனில் நியாயத்தின் பக்கத்திற்க்காக போராடுவதாலேயே அவரது இந்த சீரியலில் மவுசு அதிகம்.

இந்நிலையில் தற்போது விஷாலுடன் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளார் அகிலன். இதனை கேட்ட ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இப்படி படிப்படியாக முன்னேற வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்படி என்றால் பாரதி கண்ணம்மா சீரியலில் இவர் தொடர்ந்து நடிப்பாரா?? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. மேலும் இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரே கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here