லக்ஷ்மியை வீட்டிற்கு அனுப்பும்படி கெஞ்சும் கண்ணம்மா – வெறுப்பேற்றும் பாரதி! உண்மையை உடைத்த சண்முகம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா பாரதியிடம் லக்ஷ்மியை அனுப்பும்படி எவ்வளவோ கேட்க எதற்கும் மசியாமல் அம்மா, அப்பா வந்தால் தான் அனுப்புவேன் என்று சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் பாரதி லக்ஷ்மியை கோவத்தில் திட்டிவிட இதனால் கவலையடைகிறார் லக்ஷ்மி. பாரதி தன்னை திட்டியதையே நினைத்து கொண்டுள்ளார். அப்பொழுது சௌந்தர்யா அங்கு வர லக்ஷ்மியை சாப்பிட அழைக்கிறார். ஆனால் லட்சுமி தனக்கு பசியில்லை என்று சொல்லி விடுகிறார்.

ஆனால் சௌந்தர்யா விடாமல் அழைக்க தான் சமையல் அம்மாவிடம் செல்வதாக சொல்கிறார். ஒரு போன் செய்தால் சமையல் அம்மா வந்து விடுவதாகவும் சொல்கிறார். இதனை கேட்ட சௌந்தர்யா கண்கலங்குகிறார். பாரதி வந்து லக்ஷ்மி சாப்பிட்டு விட்டாளா?? என்று கேட்க சௌந்தர்யா கோவமடைகிறார்.

எதுக்கு தேவியில்லைமா அவளை திட்டுன என்று கேட்க தான் டென்ஷனில் இருந்ததாக சொல்கிறார். அடுத்ததாக ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார் பாரதி. அப்பொழுது லக்ஷ்மியும் கூட வந்திருக்கிறாளா?? என்று தேடுகிறார் கண்ணம்மா. ஆனால் பாரதி ஹேமாவுடன் சந்தோசமாக விளையாடிக்கொண்டுள்ளார்.

இதனை பார்த்து கண்ணம்மா வந்து லட்சுமி எங்கே என்று கேட்கிறார். லட்சுமியை அவங்க அம்மா வந்தா தான் விடுவேன்னு அன்னைக்கே சொன்னேன் தானே. இப்போ வந்து மறுபடியும் லக்ஷ்மியை பத்தி கேக்குற என்று சொல்கிறார். மேலும் லக்ஷ்மியின் அம்மாவிற்கு நான் தான் மருந்து எழுதி கொடுத்தேன் என்றும் சொல்கிறார்.

இதனால் கடுப்பான கண்ணம்மா இப்போ லட்சுமி மேல உங்களுக்கு என்ன புதுசா அக்கறை என்று கேட்கிறார். அதற்கு பாரதியும் சலிக்காமல் பதிலளிக்கிறார். மேலும் பாரதி நீ லட்சுமி உன் பொண்ணுன்னு ஒத்துக்கிட்ட அடுத்த நிமிஷமே உன்கிட்ட உன் வீட்டுல வந்து விட்டுடுவேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக லட்சுமி மற்றும் சௌந்தர்யா பேசிக்கொண்டிருக்க கண்ணம்மாவின் அப்பா சண்முகம் வந்து லக்ஷ்மிக்கு ஸ்வீட் கொடுக்கிறார். ஆனால் லட்சுமி தன் அம்மா முன்ன பின்ன தெரியாதவங்க என்ன கொடுத்தாலும் வாங்க கூடாது என்று சொல்லி இருக்காங்க என்று கூறுகிறார். இதனால் சண்முகம் நான் உனக்கு தாத்தா என்று உண்மையை உளறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here