ஹேமாவிற்காக கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி – பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா எபிசோட்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி இன்ஸ்டாவில் பாரதி கண்ணம்மாவின் வரும் எபிசோடுகளில் நடக்க இருக்கும் சீன்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவிற்கு உடல் நிலை மோசமாக இருக்கும் இந்த வேளையில் கண்ணம்மா வந்தால் தான் சரியாகும் என்ற நிலையில் பாரதி கண்ணம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார். கண்ணம்மாவும் பழைய பகை அனைத்தையும் மறந்து ஹேமாவிற்காக வர சம்மதிக்கிறார்.

barathi kannama
barathi kannama

ஹேமா கண்ணம்மாவின் குரலை கேட்டதும் லேசாக கண்முழிக்கிறார். இதனால் டாக்டரே ஆச்சரியப்படுகின்றனர். கண்ணம்மாவை பார்த்ததும் ஹேமாவிற்கு முகத்தில் சிரிப்பே வருகிறது. குடும்பம் மொத்தமும் ஹேமாவை நினைத்து அழுது புலம்புகின்றனர். வெண்பாவிற்கு ஏன் தான் ஹேமா பிழைத்தாளோ என்று இருக்கிறது.

barathi kannama
barathi kannama

இப்படி ஒரு பக்கம் இருக்க பாரதி ஹேமா கண்முழித்ததை நினைத்து நிம்மதியடைகிறார். தன்னை தேடவில்லையே என்று பரிதவித்து போகிறார். அவரது அழுகையே அனைத்தையும் காட்டி கொடுக்கிறது. இப்படி இருக்க யாரும் எதிர்பாராத விதமாக வரும் எபிசோடுகளில் நடக்க இருக்கிறது.

அதாவது பாரதி கண்ணம்மா வீட்டில் தங்குவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹேமாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பாரதி கண்ணம்மா வீட்டில் தங்க சம்மதித்து இருப்பார் என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here