ஹேமாவை காப்பாற்ற உயிரையே பணயம் வைக்கும் கண்ணம்மா – வெண்பாவின் முகத்திரையை கிழிப்பாரா ஹேமா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமாவை வெண்பா கடத்தி வைத்திருக்க அந்த பழி கண்ணம்மா மேல் விழுகிறது. மேலும் கண்ணம்மா தலையில் அடிபட்டது போல ஒரு புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. பாரதி கண்ணம்மாவின் கண்ணிலேயே படக்கூடாது என்பதற்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்து விட்டார். அதே சமயம் இந்த வெண்பா பாரதி உடன் அமெரிக்கா செல்லலாம் என்று வேறு பிளான் போட்டால் அதுவும் சொதப்பல் தான் ஆகியது.

இந்நிலையில் தான் பாரதி அசந்த நேரத்தில் ஹேமாவை கடத்தி அந்த பழியை கண்ணம்மா மீது போட்டு விட்டார். பாரதியும் முட்டாள் தனமாக கண்ணம்மா தான் கடத்தியது என்று நம்பி போலீசில் புகாரளிகிறார்.

தற்போது வெளியான ப்ரோமோவில் கூட சௌந்தர்யா தான் கண்ணம்மாவை ஜாமினில் வெளியே எடுக்கிறார். இந்நிலையில் ஹேமாவை காப்பாற்ற போவது யார்?? வெண்பா இதில் சிக்கிவாரா?? என்ற பல ட்விஸ்ட் இந்த சீரியலில் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது.

இந்நிலையில் தான் கண்ணம்மா தலையில் அடிபட்டிருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதுவும் சௌந்தர்யாவுடன் ஹாஸ்பிடலில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைராகி வருகிறது. அப்படி பார்த்தால் கண்ணம்மா தான் ஹேமாவை கைப்பற்றியுள்ளார் என்று தெரிகிறது.

இதன் பிறகு தான் சீரியல் களைகட்ட போகிறது. மேலும் ரசிகர்களுக்கு கடந்த வருடம் கண்ணம்மா பேக்கை தூக்கி கொண்டு அலைந்தது நியாபகத்திற்கு வருகிறது. இப்பொழுதும் கண்ணம்மா தலையில் கட்டு உள்ளதை பார்த்து மீண்டும் கிளம்பி விடுவாரோ என்று கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here