டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஹேமாவின் முடியை எடுக்கும் வெண்பா – அனல்பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது 8 வருடங்களுக்கு பிறகு காட்டப்பட்டதை அடுத்து இன்னும் உண்மை வெளிவராமல் இருப்பது பலருக்கும் கடுப்பாகவே உள்ளது. இந்நிலையில் ஹேமா மீது சந்தேகப்படும் வெண்பா டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்காக ஹேமாவின் தலைமுடியை எடுக்க திட்டமிடுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் பிறந்த நாளையொட்டி அவரின் மகள் லட்சுமி சௌந்தர்யா அத்தையை போலவே சேலை அணிந்து கண்ணம்மாவை மிரட்டுகிறார். தன் மகள் உருவத்தில் அத்தையை பார்க்கும் கண்ணம்மா இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி ஒரு பக்கம் இருக்க ஹேமா கண்ணம்மாவின் குழந்தையாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார் வெண்பா. அதன் பின் கண்ணம்மா பிறந்த நாளுக்கு லட்சுமி கேக் வாங்கி வைக்க கண்ணம்மாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகிறது. தன் அத்தையை போல இவளும் நம் மீது அதிக பாசம் வைத்திருப்பதை பார்த்து பூரிப்படைகிறார்.

அடுத்ததாக வெண்பாவை காட்ட வெண்பாவின் மனசாட்சி அவரை 1000 கேள்விகள் கேட்கிறது. ஹேமாவிற்கு ஏன் உன்னை பிடிக்கவில்லை. ஹேமா பார்க்க கண்ணம்மாவை போலவே இருக்கிறாளே, இதில் எதோ மர்மம் உள்ளது என்று யோசித்துக் கொண்டுள்ளார்.

பிறகு சௌந்தர்யாவை காட்ட வேணுவிடம் பேசிக்கொண்டுள்ளார். எப்படியாவது பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்து விட வேண்டும் என்று கூறுகிறார். இருவரும் சந்தோசமாக பேசிக்கொண்டிருக்க அப்பொழுது வெண்பா வர பாரதியும் கிளம்பி கீழே வருகிறார்.

வெண்பா தனக்கு இந்த மாதிரி ஒரு குடும்பம் இல்லையே என்று பொறாமையாக உள்ளதாக கூறுகிறார். இதனை கேட்ட அனைவர்க்கும் எரிச்சலாக வருகிறது. மேலும் ஹேமாவிற்கு வெண்பா கிளிப் வாங்கி வருகிறார். அதனை ஹேமாவிடம் காட்ட ஹேமா தனக்கு இதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என முகத்தில் அடித்தார் போல சொல்கிறார்.

சௌந்தர்யா இப்படி எல்லாம் பேச கூடாது என்று அதனை வாங்கிக்கொள்ள சொல்ல ஹேமாவும் வெண்பா அருகில் செல்கிறார். டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஹேமாவின் தலைமுடியை எடுக்க திட்டம் தீட்டுகிறார்.

யாரும் பார்த்திராத வண்ணம் ஹேமாவின் தலை முடியை புடுங்க ஹேமா கத்துகிறார். வெண்பா தலைமுடியை எடுத்ததை யாரும் கவனிக்கவில்லை. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here