ஹேமா, லட்சுமியை பிறந்த நாளுக்கு டிரஸ் எடுக்க அழைத்து செல்லும் பாரதி – பல பாசபோராட்டங்களுடன் வெளியான ப்ரோமோ!!

0

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் கண்கலங்க வைக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

விஜய் டிவியில் பல சீரியல்கள் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் முக்கியமான ஒரு சீரியல் தான் “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகும் “கார்த்திகை தீபம்” என்ற சீரியலின் ரீமேக் ஆகும். ரீமேக் தான் என்றாலும், இந்த சீரியல் வேற லெவல் ஹிட் அடித்து வருகிறது.

அமிர்தாவுடன் நெருக்கமாக பழக ஆரம்பிக்கும் எழில் – சந்தேகத்தில் அமிர்தாவின் அப்பா!!

இந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் மிகவும் எதார்தமாகவும் அதே சமயம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள் என்றே கூறலாம். இப்படியாக இருக்க, இந்த சீரியலில் தற்போது பல ட்விஸ்டுகளுடன் இந்த கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது. பாரதிக்கு லட்சுமியின் மேல் அன்பு நாளுக்கு நாள் அதிகமாகிறது. தற்போது இவர்களது பாசத்தினை எடுத்துரைக்கும் வண்ணம் ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் பாரதி லட்சுமியின் படிப்பு குறித்து தலைமை ஆசிரியரிடம் பேசுகிறார். அதே போல் கண்ணம்மா ஹேமாவின் படிப்பு குறித்து தலைமை ஆசிரியரிடம் பேசுகிறார். பின், பாரதி ஹேமா மற்றும் லட்சுமி இருவரையும் பிறந்த நாளிற்கு உடை வாங்க கடைக்கு அழைத்து செல்கிறார். அங்கு பாரதி ஹேமாவின் கையினை பிடித்து இருப்பதனை பார்த்து தானும் அது போலவே கையை கோர்த்து கொள்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருவரது கைகளையும் பிடித்து கொண்டு பாரதி கடைக்கு சென்று இருவருக்குமான உடையினை வாங்குகிறார். தந்தை பாசத்தினை எடுத்துரைக்கும் வண்ணம் இருக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here