பாரதி காதலியே கண்ணம்மா, டிஎன்ஏ டெஸ்ட் எப்போமா?? பாரதி கண்ணம்மாவை வச்சு செய்த நெட்டிசன்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் பல பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பாரதியிடம் இதுதான் சமையல் அம்மா என்று ஹேமா அறிமுகப்படுத்துகிறார். இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் ப்ரோமோவிற்கு கண்டபடி கமன்ட் செய்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் 8 வருடங்களுக்கு பிறகு பயணமாகி வருகிறது. கண்ணம்மா வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் அப்பா இல்லை என்று கண்ணம்மாவை வீட்டை விட்டே துரத்தினார். பாரதி முன்பு வாழ்ந்து காட்டுவேன் என்று சபதமிட்டு தனி ஆளாக நிற்கிறார் கண்ணம்மா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அகிலன், சௌந்தர்யா என அனைவரும் கண்ணம்மாவின் பக்கம் நிற்க பாரதி மட்டும் வெண்பாவின் பேச்சை கேட்டு ஆடி வருகிறார். இவர்கள் எப்பொழுது இணைவார்கள் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் கண்ணம்மா சென்னையில் தான் இருக்கிறார் என்ற உண்மை பாரதிக்கு தெரியும்.

ஆனால் ஹேமா சமையல் அம்மா என்று பாராட்டி கொண்டிருப்பவர் கண்ணம்மா தான் என்று பாரதிக்கு தெரியாது. அந்த தருணமும் வந்து விட்டது. அதாவது ஹேமா, லட்சுமி பிறந்த நாள் விழாவில் ஒளிந்து இருந்து அனைத்தையும் பார்க்கிறார் கண்ணம்மா. கடைசியில் ஹேமா வெளியில் கண்ணம்மாவை பார்த்து விட பாரதியிடம் இதுதான் சமையல் அம்மா என்று காட்டுகிறார்.

மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில முதல்வர் அதிரடி!!

வேறு வழி இல்லாமல் கண்ணம்மாவும் பாரதியின் முன்பு நிற்கிறார். இதனால் பாரதியும் ஷாக்காகிறார். இதோடு ப்ரோமோவும் முடிவடைந்தது. கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் தொடர்ந்து இப்படி சீன்கள் வருவதால் பலரும் கடுப்பாகியுள்ளனர். கமெண்ட் செக்சனில் அனல் பறக்க பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

லட்சுமி கல்யாணத்துக்குள்ள டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துருவிங்களா??, பாரதி காதலி கண்ணம்மா டிஎன்ஏ டெஸ்ட் எப்போமா?? என்று கலாய்த்து தொங்கவிட்டுள்ளனர். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here