பாரதி கண்ணம்மா ப்ரோமோ – பாரதியின் அவசர புத்தியால் உடல்நிலை மோசமாகி உயிருக்கு போராடும் ஹேமா!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பரபரப்பான கட்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி வலுக்கட்டாயமாக ஹேமாவை அழைத்து கொண்டு அமெரிக்கா செல்ல தயாராகுகிறார். சௌந்தர்யா எவ்வளவு மிரட்டியும் கேட்பதாக இல்லை. கடைசியில் தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வீட்டை விட்டு கிளம்புகிறார்.

ஹேமாவிற்கு இதுவரையிலும் உடல்நிலை சரியில்லாத நிலையில் அதனை கூட பொருட்படுத்தாமல் அமெரிக்காவிற்கு அழைத்து செல்கிறார். இந்த சீரியலில் புது வரவாக அறிமுகமான பிரியாவும் ஹேமாவின் உடல்நிலை பற்றி சொல்கிறார். ஆனாலும் எதையுமே பாரதி கேட்பதாக இல்லை.

ஹேமாவை நினைத்து அனைவரும் கதற இந்த மாதிரி நாடகம் போடாதீங்க என்று மூஞ்சியில் அடித்தார் போல சொல்லி விடுகிறார். இந்நிலையில் விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது காரில் பாரதி ஹேமா மற்றும் பிரியா சென்று கொண்டிருக்க அப்பொழுது பார்த்து ஹேமாவிற்கு உடல் நிலை மோசமாகிறது.

ஏற்கனவே காய்ச்சலாக இருந்ததால் தற்போது அழுததும் சேராததால் மயக்கமடைகிறார். பாரதியும், பிரியாவும் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். ஹேமாவின் நிலை மோசமாக இருக்க அவரை ஐசியுவில் அனுமதிக்கின்றனர். சௌந்தர்யா, வேணு என அனைவரும் கதறி அழுகின்றனர். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here