தீவிரவாதிகளால் உயிரிழக்கும் ஹேமா? பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்த ட்விஸ்ட்!!

0

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக தொய்வில் இருந்த பாரதி கண்ணம்மா தொடர் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோடுகள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அண்மையில் பாரதிக்கு ஹேமா மற்றும் லக்ஷ்மி குறித்த உண்மைகள் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பாரதியின் மருத்துவமனை தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும் பாரதி அமைச்சருக்கு ஆபரேஷனை தொடங்குகிறார். ஒரு பக்கம் தீவிரவாதிகள் குழந்தைகளின் தலையில் துப்பாக்கி வைத்து ஆபரேஷன் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பாரதிக்கு உதவியாக தீவிரவாதிகள் கண்ணம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்புகின்றனர். இந்த பக்கம் ஹேமா ஹாஸ்பிடலுக்கு செல்லும் சாப்பாட்டு வண்டியில் ஏறி பாரதியிடம் சேர பிளான் செய்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மற்றொரு பக்கம் பாரதி அமைச்சருக்கு தொடர்ந்து பல்ஸ் ரேட் குறைந்து கொண்டே வரும் நேரத்தில் ஒரு இன்ஜெக்ஷன் ஒன்றை போடுகிறார். இந்த நிலையில் மீண்டும் அவருடைய பல்ஸ் நார்மலுக்கு வருகிறது. மேலும் கண்ணம்மா அமைச்சருக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சு போச்சு அவர் உயிர் பிழைத்து விட்டார் என தீவிரவாதிகளிடம் சொல்ல, அதை உறுதி செய்த தீவிரவாதிகள் லட்சுமியை விட்டு விடுகின்றனர்.

இந்த நிலையில் ஹேமா இறந்து போவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் தீவிரவாதிகளால் ஹேமா கொல்லப்பட்டாரா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here