‘பாரதி தான் உன்னோட அப்பா’ – லட்சுமியிடம் உண்மையை போட்டு உடைக்கும் கண்ணம்மா! அதிர்ச்சியில் பாரதி!!

0

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி லட்சுமியிடம் அப்பா பெயர் குறித்து கேட்கிறார். அப்பா பெயர் குறித்து தெரியாமல் விழிக்கும் லட்சுமி கண்ணம்மாவிடம் அது குறித்து கேட்கிறார். கண்ணம்மாவும் பாரதியின் பெயரை சொல்லி விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று கண்ணம்மா மற்றும் லட்சுமி இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு வெண்பா வீட்டில் வேலை செய்யும் பெண் வெண்பா மற்றும் பாரதி இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அர்ச்சனை செய்கிறார்.

இதனால் கோபம் அடையும் கண்ணம்மா அவரை கன்னத்தில் நாலு அறை விடுகிறார். இப்படியாக இருக்க, லட்சுமிக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்றும் பாரதி பள்ளிக்கு செல்கிறார்.

ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் செய்த மாபெரும் சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

லட்சமியுடன் கண்ணம்மாவும் பள்ளிக்கு வருகிறார். அங்கு பாரதி மற்றும் வெண்பா இருவரும் இருப்பதை பார்த்து விட்டு கண்ணம்மா ஒளிந்து கொள்கிறார். இதனை அடுத்து பாரதியை பார்க்கும் லட்சுமி அவரிடம் பேச செல்கிறார்.

பின், பாரதி மற்றும் வெண்பா இருவரும் சேர்ந்து லட்சுமிக்கு ஃபீஸ் கட்ட பள்ளிக்கு செல்கின்றனர். அங்கு சென்றதும் பாரதி லட்சுமியிடம் சான்றிதழில் அப்பா பெயர் போட லட்சுமியிடம் கேட்கிறார். லட்சுமி தனது அப்பா பெயர் தெரியாமல் திணறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை பார்த்த பாரதி கண்ணம்மாவிற்கு கால் செய்து அப்பா பெயரை கேட்க சொல்கிறார். லட்சுமியும் தனது அம்மாவிடம் அது குறித்து கேட்கிறார். முதலில், பாரதியின் பெயரை சொல்ல தயங்கும் கண்ணம்மா, பின் தைரியமாக பாரதி தான் உனது அப்பா பெயர் என்று தெரிவித்து விடுகிறார்.

இதனால் லட்சுமி அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இதனை பாரதியிடம் கூறும் போது பாரதி அதற்கு மேல் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here