கெட்டவார்த்தையில் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பாரதி கண்ணம்மா பரீனா – ஆடிப்போன இன்ஸ்டா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் பரீனா தற்போது தன்னை கிண்டலடிக்கும் ரசிகர்களை கெட்ட வார்த்தையில் திட்டி பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமான பரீனா சில காலமாகவே சோசியல் மீடியாவில் கேலிகிண்டலுக்கு ஆளாகி வருகிறார். இவர் கர்ப்பமான நாளில் இருந்தே போட்டோஷூட் என கலக்கி வருகிறார். எல்லார் மாதிரியும் வழக்கமான போட்டோஷூட்டாக இல்லாமல் கர்ப்பகாலத்தில் பல விசித்திரமான போட்டோஷூட் செய்தார்.

நீருக்கடியில் போட்டோஷூட், பாத் டப் போட்டோஷூட், வயிற்றில் மெகந்தி வைத்து போட்டோஷூட் என இணையத்தையே கலக்கி வந்தார். இது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் வெண்பாவை அனைவருமே திட்ட ஆரம்பித்தனர். ஒரு சிலர் அட்வைஸ் செய்யவும் ஆரம்பித்தனர்.

ஆனால் அதற்கும் பரீனா இது தன்னுடைய சொந்த விருப்பம் என்று கூறி கேலி கிண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அடங்காத சில நெட்டிசன்கள் பரீனாவை திட்டுவதை நிறுத்தவில்லை.

மேலும் மேலும் பேசிக்கொண்டே தான் சென்றனர். இப்பொழுது பொறுமையின் எல்லையை கடந்த பரீனா தற்போது இன்ஸ்ட்டாவில் பதிவு ஒன்றில் கெட்ட வார்த்தையில் தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலளித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here