ஒரு மருமகள் ஓடிட்டா.., இன்னோரு மருமகள் சாவப்போற.., பாரதி குடும்பம் சீரழிவதை பார்த்து சந்தோசப்படும் வெண்பா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது லட்சுமி பாரதி வீட்டில் இருக்க இது தெரியாமல் வெண்பா அஞ்சலிக்கு இருக்கும் பிரச்னையை நினைத்து சந்தோஷமடைகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா நேற்றைய எபிசோடில் லக்ஷ்மியை வேறு வழியில்லாமல் வீட்டிலேயே விட்டு செல்கிறார். லக்ஷ்மியை பிரிய முடியாமல் தவிக்கிறார் கண்ணம்மா. அந்த வீட்டில் லக்ஷ்மியை நன்றாக கவனித்து கொள்வார்களா? என்று புலம்பி கொண்டுள்ளார்.

barathi kannamma

பாரதிக்கு தன்னை சுற்றி உள்ள அனைவருமே பொய் சொல்கின்றனர் என்று கோவம் வருகிறது. மேலும் இன்றைய எபிசோடில் லட்சுமி ஸ்ட்ரெதஸ்கோப்பை வைத்து இதயத்துடிப்பை பார்த்து கொண்டுள்ளார். அப்பொழுது பாரதி அங்கு வர லட்சுமி தன் அம்மாவுக்கும் இதயம் இந்த சத்தம் தானே கேக்கும் என்று சொல்கிறார்.

அதற்கு பாரதி உங்க அம்மாவுக்கு இதயமே இல்லை எப்படி சத்தம் கேக்கும் என்று நினைத்து கொள்கிறார். அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் பாரதி ஏன் லக்ஷ்மியை இங்க கூட்டிட்டு வந்து இருக்கான். ஏதும் பிரச்சனையா இருக்குமா??

ஒரு வேளை கண்ணம்மா தன் லட்சுமி அம்மானு தெரிஞ்சிடுச்சா என்றும் பயப்படுகின்றனர். பாரதி வந்து கேட்டால் உண்மையை சொல்லுவோம் என்றும் யோசிக்கின்றனர். அடுத்ததாக வெண்பா வீட்டில் ஆப்பிள் சாப்பிட்டு கொண்டு ஆனந்தமாக உள்ளார்.

ஷாந்தி என்ன விஷயம் என்று கேட்க அஞ்சலி வயிற்றில் வளரும் குழந்தையால் அஞ்சலிக்கு ஆபத்து என்று சொல்லி சந்தோசப்படுகிறார். ஒரு மருமகள் வீட்டை விட்டு போயிட்டா.., இன்னொரு மருமக சாவப்போற என்று நக்கலடித்து சிரிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here