‘பாரதியை நெனச்சு வாழ்றதுக்கு பேசாம செத்துடலாம்’ – தற்கொலைக்கு முயற்சிக்கும் வெண்பா!! காப்பாற்றப்படுவாரா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு வெண்பா பற்றிய உண்மை தெரிய வர அவரை கடுப்பேற்ற பாரதியிடம் நெருங்கி பழகி வருகிறார். இனி வரும் எபிசோடுகளில் பல ட்விஸ்டுகள் காத்து கொண்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

அஞ்சலியின் வளைகாப்பு விழாவிற்கு கண்ணம்மா லட்சுமியுடன் செல்ல வெண்பாவும் பாரதியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது. இதனால் கண்ணம்மாவிற்கு இத்தனை நாட்கள் இருந்த பாரம் சற்று குறைந்துள்ளது என்றே சொல்லலாம். வெண்பாவை அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் கேவலமாக பேச ஆரம்பிக்கின்றனர்.

இனி அடுத்து ஹேமா பற்றிய உண்மை தெரிவது மட்டும் தான் பாக்கி. இந்நிலையில் கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேற்ற பல வேலைகளை செய்து வருகிறார். சாப்பிட அமரும் போது கண்ணம்மாவும் பாரதியும் தெரியாமல் அருகில் அமர எதிரில் அதனை பார்த்த வெண்பா கடுப்பாகிறார்.

கண்ணம்மா பாரதியின் மீது கால் போட லக்ஷ்மிக்கு ஊட்டி விடுவது போல பாரதியை உரசுவது என பல சில்மிஷங்களை செய்து வருகிறார். இதனை பார்த்த ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமடைகிறது. பாரதி கை கழுவும் போதும் கண்ணம்மாவும் செல்ல சௌந்தர்யா பாரதி மீது கண்ணம்மாவை தள்ளி விடுகிறார்.

இதனால் கோவமடையும் பாரதி கண்ணம்மாவிடம் இதுநாள் வரை நான் கல்யாணம் செஞ்சுக்கல.., ஆனால் இதுக்கு மேல நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்க மாட்டேன் என்றும் சொல்கிறார். அடுத்ததாக சுமதி வெண்பாவை மேலும் ஏற்றி விடுகிறார். இத்தனை நாள் பாரதியின் மனைவி என்ற கௌரவமாவது இருந்தது.

ஆனால் இப்போ கண்ணம்மாவிற்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு இப்படி அவமானமாகிடுச்சு என்று சொல்கிறார். சொந்தர்யா குடும்பத்தை சும்மா விட கூடாது என்று சொல்கிறார். அஞ்சலிக்கு கொடுத்த அந்த விஷ மாத்திரை இப்போ என்னாச்சு என்று கேட்கிறார். அஞ்சலியிடம் சென்று வெண்பா தான் கொடுத்த மாத்திரையை பற்றி விசாரிக்கிறார். அஞ்சலி அதனை போட்டதும் தான் அதிகமாக நெஞ்சு வலிப்பதாக சொல்கிறார்.

அதனை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார் வெண்பா. அடுத்ததாக கண்ணம்மா சௌந்தர்யாவை தேடி அலைகிறார். அப்பொழுது அவர்கள் கிளம்பி விட்டதாக சொல்ல கண்ணம்மா ஷாக்காகிறார். மேலும் லட்சுமி தூங்கி கொண்டிருக்க தனக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை பற்றி யோசித்து கொண்டுள்ளார்.

சௌந்தர்யா சொன்ன எதையுமே கண்ணம்மா நம்பவே இல்லை. வெண்பா தனக்கு வளைகாப்பு விழாவில் நடந்தவற்றை நினைத்து கொதித்துக்கொண்டுள்ளார். அதுவும் கண்ணம்மா அருகில் பாரதி அமர்ந்திருப்பதை வெண்பாவால் நினைத்து கூட பார்த்ததில்லை. இத்தனை நாட்கள் நடந்தது அனைத்தையும் சொல்லி புலம்புகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here