பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவை எப்படியோ காப்பாற்றிய நிலையில் கண்ணம்மாவை நினைந்து புலம்பிக்கொண்டே இருக்க அவரை சிறிது நாள் அங்கேயே ஹேமா இருக்கட்டும் என்று முடிவெடுக்கிறார்.
அடுத்ததாக ஹேமா தன் அப்பாவை விட்டு பிரிய மானமில்லாமல் பாரதியிடமே திரும்ப வர அமெரிக்கா செல்ல ஒத்துக்கொள்கிறார். கடைசியாக சமையல் அம்மாவை ஒருதடவை பார்த்து விட்டு செல்லலாம் என்று சொல்ல பாரதியே அழைத்து செல்கிறார்.
கண்ணம்மாவை பார்த்ததும் பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது. மேலும் கண்கலங்கி விட்டு தான் வீட்டை விட்டு சென்றார். இந்நிலையில் ஹேமாவிற்கு தன் அம்மா யார் என்றே தெரியாது. அவரின் பெயர் கூட தெரியாது. இந்நிலையில் தற்போது பாஸ்போர்ட் ஆபீஸில் கொடுத்த பார்மில் அம்மா பெயர் கண்ணம்மா என்று இருக்க அதனை பிடித்து கொண்டார்.
தன் அம்மா பெயர் கண்ணம்மா தான் என்று சொல்ல வீடே அதிர்ச்சியாகிறது. அப்பொழுது பாரதியும் வர என்ன சொல்ல போகிறரோ என்று இருந்தவர்களுக்கு பெரிய ட்விஸ்ட் பாரதியே அமாம் என்று ஒத்துக்கொண்டது தான். உங்க அம்மா பேரு கண்ணம்மா தான் என்று கூறுகிறார்.
பாரதி மனசு மாறுவாரா?? ஹேமாவிற்கு சமையல் அம்மா தான் தன்னுடைய நிஜ அம்மா என்ற உண்மை தெரிய வருமா?? என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஹேமாவின் கட்டாயத்தின் பெயரின் பாரதியும், கண்ணம்மாவும் இணைந்து செலஃபீ எடுத்துக்கொள்கின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்