வெண்பா தொலைந்ததற்கு சௌந்தர்யா மீது சந்தேகப்படும் பாரதி – அடிதடியில் முடிந்த பாரதி கண்ணம்மா எபிசோட்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தொலைந்ததற்கு சௌந்தர்யா தான் காரணம் என்று பாரதி சந்தேகப்படுகிறார். இதனால் அகிலனுக்கும், பாரதிக்கும் சண்டையாகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் சாந்தி வெண்பாவை காணாமல் தவித்து போகிறார். அடுத்ததாக வெண்பாவிற்கு சாப்பாடு கூட போடாமல் கட்டி வைத்துள்ளார். கட்டை அவிழ்த்து விடும் வெண்பா ஜன்னலில் வந்து பார்க்க பாரதி நின்று கொண்டுள்ளார். பாரதி என்று கத்த அது அவர் காதில் கேட்கவே இல்லை. அப்பொழுது சாந்தியும் பாரதியை பார்க்க வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெண்பாவை 2 நாட்களாக ஆளை காணோம் பயமாக இருக்கு என்று சொல்கிறார். அடுத்து பாரதிக்கு சௌந்தர்யா மீது சந்தேகம் எழுகிறது. சௌந்தர்யாவும் அகிலனும் கண்ணம்மாவை பற்றி பேசிக்கொண்டிருக்க அப்பொழுது வரும் பாரதி நீங்க தான் வெண்பாவை எதோ பண்ணி இருக்கீங்க என்று சொல்கிறார். இதனால் அகிலனுக்கு கோவம் வருகிறது.

யாரை பார்த்து என்ன கேள்வி கேட்ட, அம்மா அப்படி பண்ற ஆளா என்று சொல்கிறார். இதனால் பாரதிக்கு அகிலனுக்கும் சண்டை வருகிறது. சௌந்தர்யா இதனை போலீசில் சென்று கம்பளைன்ட் கொடுக்க சொல்கிறார். எதுவுமே ஆதாரமே இல்லாமல் ஒரு விஷயத்தை நம்புற. இதே தான் கண்ணம்மா அண்ணியையும் சந்தேகப்பட்டு இப்போ குழந்தையை வச்சு கஷ்டப்படுறா,என்று சொல்ல பாரதிக்கு ஆத்திரம் வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா – 3 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!

வெண்பா ஒரு வெக்கங்கெட்டவள் என்றும் சொல்கிறார். மேலும் வெண்பாவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வருவேன் என்றும் மிரட்டுகிறார். இதற்கு சௌந்தர்யா முடிந்தால் பண்ணி பாரு அவளை சுட்டு கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்ததாக கண்ணம்மாவை லட்சுமி ஸ்கூல் மீட்டிங்கிற்கு அழைக்கிறார்.

ஆனால் கண்ணம்மா தான் வரவில்லை என்று சொல்கிறார். அடுத்ததாக ஹேமாவும், பாரதியும் விளையாடிக்கொண்டுள்ளனர். அப்பொழுது சௌந்தர்யா அங்கு வர, பாரதியை மன்னிக்கும்படி சௌந்தர்யாவும் கெஞ்சுகிறார். இதனால் சௌந்தர்யா பாரதியை மன்னித்து விடுகிறார். அடுத்ததாக ஹேமாவும் பாரதியை ஸ்கூல் மீட்டிங்கிற்கு அழைக்கிறார். இதனால் கண்ணம்மாவை பார்த்து விடுவாரோ என்று சௌந்தர்யா பயப்படுகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here