Tuesday, July 27, 2021

ரவுடிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் ஹேமா – கண்ணம்மாவிடம் சிக்குவாரா?? அனல்பறக்கும் கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

Must Read

பாரதி சீரியலில் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ஹேமாவை காப்பாற்ற போவது யார்?? வெண்பா சிக்குவாரா? என்ற பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் நேற்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மாவை கேவலமாக பேச அதற்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு கண்ணம்மாவும் பேசி விடுகிறார். வெண்பா நல்லவர் போல வந்து நடிக்க கண்ணம்மாவிற்கு வெறியானது. மேலும் ஹேமாவை கடத்திய ஆட்கள் வெண்பாவின் போன் நம்பரை ஹேமா முன்னே சொல்ல அதனை மனப்பாடமும் செய்து வைக்கிறார்.

மேலும் சீரியலில் பெரிய ட்விஸ்ட்டாக அஞ்சலிக்கு நெஞ்சு வலி வேறு ஏற்பட இன்றைக்கு ரிசல்ட்டுக்காக மருத்துவமனைக்கு செல்ல தயாராகிறார். மேலும் சௌந்தர்யா ஹேமாவை காணாமல் சமயம் கண்ணம்மாவை எப்படி வெளியே கொண்டு வருவது எப்படி என்றும் யோசித்து கொண்டுள்ளார்.

மேலும் லட்சுமியை அகிலன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். லட்சுமி ஹேமா எங்கே அம்மா எங்கே என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அனைவரும் எப்படியோ சமாளிக்கின்றனர். கண்ணம்மாவிற்கு அகிலன் கால் செய்து கொடுக்கிறார். அதன் பிறகு ஹேமாவை காட்ட ஹேமா பாத்ரூம் செல்வதாக சொல்கிறார்.

அப்பொழுது அந்த இடத்தில் தப்பித்து செல்ல ஒரு இடம் இருக்க அந்த பக்கம் செல்கிறார். டிரஸ் ஒரு ஆணியில் மாட்டி கொள்கிறது. அதற்குள் அடியாள் பார்த்து விட எப்படியோ தப்பித்து ஓடி விடுகிறார். அடுத்ததாக சௌந்தர்யா கண்ணம்மாவை ஜாமினில் வெளியே எடுக்கிறார்.

ஹேமாவை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று பதறுகிறார் கண்ணம்மா. ஹேமா ஒரு இடத்தில் ஒளிந்து கொள்ள அந்த இடத்திற்கு சரியாக ரௌடிகளும் வந்து விடுகின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குக் வித் கோமாளி கனி.. ரசிகர்கள் வாழ்த்து!!!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் கனி. இவர் தன்னுடைய மகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டி உள்ளார்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -