கண்ணம்மா மேல் இருக்கும் கோவத்தை லட்சுமி மீது காட்டும் பாரதி – வீட்டிற்கு அழைக்கும் ஹேமா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா லக்ஷ்மியை பார்க்க வர அந்த நேரத்தில் அங்கு வரும் பாரதி லக்ஷ்மியை அனுப்ப மறுக்கிறார். மேலும் கண்ணம்மா மேல் இருக்கும் கோவத்தை லட்சுமி மீது காட்டுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா லக்ஷ்மியை பிரிந்து இருக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் ஒரு முடிவெடுத்து பாரதி வீட்டிற்கு செல்கிறார். அங்கு சௌந்தர்யா மட்டும் இருக்க தன்னால் லக்ஷ்மியை பிரிந்து இருக்க முடியவில்லை என்றும், ஒரு நாள் கூட இப்படி இருந்ததில்லை என்றும் சொல்கிறார்.

சௌந்தர்யாவும் பாரதியை திட்ட ஆரம்பிக்கிறார். எல்லா விசயத்திலும் இவன் இப்படி தான் பண்றான் இவனை எப்படி திருத்துறதுனே தெரியல என்று சொல்கிறார். மேலும் கண்ணம்மா இதற்கு மேல் தன்னால் போராடுவதற்கு தெம்பு இல்லை என்றும் சொல்கிறார்.

சௌந்தர்யா பாரதி வீட்டிற்கு வருவதற்குள் லக்ஷ்மியை அழைத்து செல் என்று சொல்ல சரியாக பாரதியும் வருகிறார். கண்ணம்மாவை பார்த்து நக்கலாக பேசுகிறார். என்ன சமையல் அம்மா இந்த பக்கம் என்று சொல்கிறார். மேலும் அந்த லட்சுமி பொண்ணை பார்க்க வந்தீங்களா?? என்றும் கேட்கிறார்.

கண்ணம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாரதியும் லட்சுமி என்று அழைக்க அவரும் வருகிறார். அப்போழுது லட்சுமி அம்மா என்று அழைக்க வந்து அதன் பிறகு சமையல் அம்மா என்று சொல்கிறார். இதனை பார்த்த பாரதி நக்கலாக சிரிக்கிறார்.

குழந்தை மனசுல என்ன பண்ணி வச்சு இருக்காங்க என்று ஆத்திரமடைகிறார். அடுத்ததாக லட்சுமி பாரதியை சாப்பிட அழைக்கிறார். பாரதி தனக்கு பசிக்கவில்லை என்று சொல்ல லட்சுமி உடம்பு கெட்டுவிடும் வாங்க என்று விடாமல் அழைக்கிறார். இதனால் பாரதிக்கு கோவம் வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டி சோதனையில் சாதனை படைத்த சமந்தா – குவியும் பாராட்டுக்கள்!!

அதன் சொல்றேன்ல பசிக்கலனு விட மாட்டியா?? என்று கேட்கிறார். இதனால் லட்சுமி மன்னிப்பு கேட்டு அங்கிருந்து செல்கிறார். பாரதிக்கு என்னவோ போல ஆகிறது. பெரியவங்க பண்ற தப்புல குழந்தையை திட்டறோமே என்று வருத்தப்படுகிறார். அப்பொழுது ஹேமா பாரதிக்கு கால் செய்கிறார். ஏன் என்னை பாக்கவே வரல என்று சொல்கிறார். இதனால் சந்தோஷமடையும் பாரதி இப்பொழுதே வருவதாக சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here