மீண்டும் கண்ணம்மாவை நினைத்து சாப்பிடாமல் தவிக்கும் ஹேமா – பரிதவிப்பில் பாரதி எடுக்கப்போகும் முடிவு என்ன??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இன்றைய எபிசோடில் லட்சுமி வந்து ஹேமாவை பார்க்கிறார்.மேலும் ஹேமா கண்ணம்மாவுடன் தான் இருக்க என்று டாக்டர் கூறுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கண்முழித்ததை அடுத்து குடும்பமே நிம்மதியாக உள்ளது. அடுத்ததாக கண்ணம்மாவிற்கு அனைவரும் நன்றி சொல்கின்றனர். உன்னால் தான் ஹேமா கண் முழுச்சா இல்லனா என்ன ஆகியிருக்கும்னு நெனச்சு கூட முடியல என்று கண்கலங்குகின்றனர். அடுத்ததாக லட்சுமி ஹாஸ்பிடலுக்கு வருகிறார்.

barathi kannamma

ஹேமாவிற்கு என்ன ஆனது என்று பதறுகிறார். ஹேமா லக்ஷ்மியை பார்த்து சந்தோஷமடைகிறார். சௌந்தர்யாவிற்கு பழைய நியாபகங்கள் எல்லாம் வருகிறது. உங்க இரண்டு பேரையும் பிரிச்சுட்டேன் என்று கண்கலங்குகிறார். லட்சுமியிடம் ஹேமா தான் அமெரிக்கா செல்லவில்லை என்று சொல்கிறார். இதனால் லட்சுமி மிகவும் சந்தோஷமடைகிறார். அடுத்ததாக லக்ஷ்மியை அழைத்து கொண்டு கண்ணம்மா வெளியில் செல்கிறார்.

துளசி, லட்சுமி, கண்ணம்மா மூவரும் வீட்டிற்கு செல்ல ஹேமாவை பற்றி பேசிகொண்டுள்ளனர். தனக்கு எப்படி பாரதி அங்கிள் மீது பாசம் இருக்கோ அதே மாதிரி தான் ஹேமா உன்மேல பாசம் வச்சு இருக்கா என்று சொல்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா ஹேமாவிற்கு சாப்பாடு கொடுக்க அதனை சாப்பிட மறுக்கிறார். மேலும் சமையல் அம்மா இருந்தால் தான் சாப்பிடுவன் என்று அடம் பிடிக்கிறார். மேலும் அப்பா தான் சமையல் அம்மாவை அனுப்பி விட்டிருப்பார் என்று சொல்கிறார்.

அப்படி எல்லாம் இல்லை என்று சமாதானம் செய்ய ஹேமாவிற்கு காய்ச்சல் மட்டும் குறையவே இல்லை. அடுத்ததாக டாக்டர் வந்து கண்ணம்மா தான் இவருக்கு மருந்து. அவருடன் இருந்தால் தான் ஹேமா குணமடைவார் என்று சொல்கிறார். இதனால் கோவமடையும் பாரதி வெளியே சென்று விடுகிறார். கண்ணம்மா மட்டும் தான் ஹேமாவிற்கு மருந்து என்று டாக்டர் தீர்க்கமாக சொல்லி விடுகிறார்.

barathi kannamma

மேலும் டிஸ்சார்ஜ் லெட்டரில் பாரதி கையெழுத்திட மறுக்கிறார். இதனால் கோவமடையும் சௌந்தர்யா அவரே கையெழுத்திடுகிறார். ஹேமாவை காப்பாற்ற என்ன செய்யணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க இனி எல்லாம் உன் கையில தான் இருக்கு என்று சௌந்தர்யா சொல்ல பாரதிக்கு ஆத்திரமாக வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here