பாரதி கண்ணம்மா எபிசோடு – பாரதியை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவிடாமல் திசைதிருப்பும் வெண்பா, மோசமாகவும் அஞ்சலியின் நிலை!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி இத்தனை நாட்கள் கண்ணம்மாவின் மகளுடனா பழகிக்கொண்டிருந்தோம் என்று வெண்பாவிடம் புலம்ப ஆரம்பிக்க கண்ணம்மாவை பற்றி தவறாக கூறி பாரதிக்கு கோவத்தை தூண்டி விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி பாரதி வீட்டில் இருக்க தன் அம்மாவிடம் கேட்பது போலவே பல கேள்விகளை கேட்டு அடுக்குகிறார். அதாவது ஹேமாவிற்கு நிறைய தோழிகள் இருக்காங்க அவங்களை எல்லாம் இப்படி தான் கூப்பிட்டு கவனிச்சுக்குசிங்களா?? நான் ஏன் உங்களை தாத்தா, பாட்டினு கூப்பிடனும் என்று கேட்க சௌந்தர்யா திணறி போகிறார்.

பாரதி வெண்பாவுடன் வீட்டில் நடந்தவற்றை சொல்லி புலம்பி கொண்டுள்ளார். லட்சுமியை என் கூட பழக வச்சு இத்தனை நாள் என்ன ஏமாத்திட்டாங்க என்று சொல்கிறார். இதுதான் சாக்கு என்று கண்ணம்மாவை பற்றி மேலும் தவறாக பேசுகிறார் வெண்பா.

ஹேமா கூட நெருக்கமா பழகுறா. லட்சுமியை உன் கூட பழக விட்டிருக்க இதுல அவளுக்கு தானே அதிக லாபம். இப்போ ஹேமாவை அவங்க கிட்ட இருந்து எப்படி கூட்டிட்டு வர போற என்று கேட்கிறார். மேலும் லட்சுமியை உன் கூட பழக விட்டுட்டு, அப்பறம் உன் பொண்ணுன்னு சொன்னா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஒத்துக்குவல அதுக்கு தான் பிளான் போடுறாங்க என்று சொல்கிறார்.

ஒரு நாளைக்கு மட்டும் கைதியாக வாழவேண்டுமா???

இதனை கேட்ட பாரதி தான் இனிமேல் டிஎன்ஏ டெஸ்டை எடுக்க ஒரு போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றும் சொல்கிறார். இதை கேட்டவுடன் தான் வெண்பாவிற்கு நிம்மதியே வருகிறது. அடுத்ததாக வெண்பாவிற்கு அஞ்சலி கால் செய்து பேசுகிறார். வெண்பா அஞ்சலியின் உடல் நலனை விசாரிக்கிறார்.

ஒரு டாக்டரா இந்த விஷயத்தை வீட்டுல சொல்லாம மறைச்சது என் தப்பு என்று வெண்பா நடிக்கிறார். அஞ்சலி அதனால் ஒன்றும் இல்லை. நான் தானே பொய் சொல்ல சொன்னேன் என்று சொல்கிறார். மேலும் வெண்பா அஞ்சலி வேகமாக சாக ஒரு மருந்தை கொடுக்க போவதாகவும் சொல்கிறார்.

இதனை அஞ்சலியிடம் உன்னை காப்பாற்றும் மருந்து என்று பொய் சொல்கிறார். இதனை சாந்தி கேட்டு சந்தோஷமடைகிறார். எந்த மருந்து எழுதி தந்தாலும் பாரதி பெயரை போட்டு எழுதி கொடுங்க கடைசியில அவரு மாட்டட்டும் என்று சொல்கிறார் இதோடு எபிசோடு முடிவடைந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here