பாரதியுடன் அமெரிக்கா செல்ல திட்டம் போடும் வெண்பா – மோசமாகும் ஹேமாவின் நிலை?? அனல்பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி வெளிநாட்டிற்கு செல்ல போவதாக வெண்பாவிடம் சொல்ல இதனால் ஷாக்காகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கு கண்ணம்மா பற்றிய ஓரளவு உண்மைகள் தெரிய வருகிறது. இதனால் மிகவும் கோவமடையும் பாரதி கண்ணம்மாவை கண்டபடி திட்டி விடுகிறார். மேலும் அவசர அவசரமாக ஏதேதோ முடிவெடுக்கிறார் பாரதி. அதிலும் ஒரு பக்கம் வெண்பா சேலை, பூ எல்லாம் வைத்து குடும்ப பெண்ணாக உருவெடுக்கிறார்.

வேலைக்கார பெண் ஏன் இந்த கெட்டப் என்று கேட்க அதற்கு பாரதிக்கு தான் குடும்ப பெண் என்று தெரிய வேண்டும், மேலும் ஹேமாவை நன்றாக பார்த்து கொள்வேன் என்ற நம்பிக்கை வர வேண்டும் என்று கூறி சிரிக்கிறார்.அடுத்ததாக கண்ணம்மாவை பார்க்க சௌந்தர்யா ஸ்கூலில் காத்துக்கொண்டுள்ளார்.

ஹேமா கண்ணம்மா கண்ணம்மா என்று புலம்பி கொண்டுள்ளதாக சொல்கிறார். மேலும் அமெரிக்கா செல்வதை நினைத்து காய்ச்சலால் கிடப்பதாக சொல்கிறார். மேலும் ஹேமாவுக்கு அம்மாவாலும் பிரச்சனை, அப்பாவாலும் பிரச்சனை என்று சொல்கிறார். இதனால் ஷாக்காகும் கண்ணம்மா வெண்பாவால் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.

என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார் சௌந்தர்யா. அடுத்ததாக லட்சுமி அங்கு வர ஹேமாவை பற்றி விசாரிக்கிறார். ஹேமாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதும் தான் சென்று ஹேமாவை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனை சௌந்தர்யாவிடம் வந்து கேட்கிறார்.

மேலும் கண்ணம்மாவிடமும் கேட்கிறார். அவரும் ஒத்துக்கொள்கிறார். அடுத்ததாக வெண்பா பாரதியை வந்து பார்க்கிறார். பாரதி வெண்பாவை பார்த்ததும் ஷாக்காகி மெய் மறந்து பார்க்கிறார். மேலும் அழகாக இருப்பதாகவும் சொல்கிறார். மேலும் தன்னால் இனி உன்னை பார்க்க முடியாது என்றும் தான் அமெரிக்கா செல்ல போவதாகவும் சொல்கிறார்.

இதனால் வெண்பா அதிர்ச்சியாகிறார். இத்தனை நாள் செய்த பிளான் எல்லாம் தரைமட்டமாகி விடுமோ என்று பயப்படுகிறார். மேலும் வெண்பாவும் தானும் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாகவும் சொல்கிறார். இதற்கு பாரதி மறுக்கிறார். என்னால் தான் உனக்கு பிரச்சனையே.

தான் சென்று விட்டால் உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் சொல்கிறார். அடுத்ததாக வீட்டில் ஹேமா முடியாமல் இருப்பதை நினைத்து அனைவரும் வருத்தப்படுகின்றனர். மேலும் லட்சுமி அங்கு வர ஹேமாவை சமாதானப்படுத்துகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here