கண்ணம்மாவை அடுத்து துளசி மீது டார்கெட்டை திருப்பும் வெண்பா! உண்மை வெளிவருமா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கு தன்னுடைய குழந்தை பற்றிய நினைப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க அதனை பற்றி துளசியிடம் கேட்டு கெஞ்சுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கு தனக்கு இரண்டாவது குழந்தை பற்றிய உறுத்தல் இருந்து கொண்டே உள்ளது. தனக்கு பிரசவம் பார்த்த துளசியிடம் இதனை கேட்டு விடலாம் என்று கண்ணம்மா மருத்துவமனைக்கு வருகிறார்.

ஆனாலும் கடைசியில் கண்ணம்மாவிடம் துளசியும் பொய் சொல்கிறார். தனக்கு இந்த உண்மை தெரியவே தெரியாது என்று சாதிக்கிறார். வேறு வழியில்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். அடுத்ததாக ஹேமாவை அழைத்து கொண்டு வெண்பா வீட்டிற்கு செல்கிறார்.

மேலும் ஷாப்பிங் செல்வதற்காக உன்னையும் அழைக்க வந்தேன் என்று சொல்கிறார். அடுத்ததாக வெண்பாவிடம் துளசியை பற்றி சொல்கிறார். துளசி தான் கண்ணம்மாவிற்கு குழந்தை பிறக்கும்போது இருந்த நர்ஸ் அவரை எதற்கு எங்க அம்மா அடிக்கடி பாக்குறாங்க என்று சொல்கிறார்.

இதனால் வெண்பாவிற்கும் துளசி மீது சந்தேகம் எழுகிறது. இதில் எதோ ஒரு ரகசியம் இருப்பதாக நினைத்து கொள்கிறார். வெண்பாவின் அடுத்த டார்கெட் துளசி மீது திரும்புகிறது. அடுத்ததாக அஞ்சலிக்கு குழப்பத்தில் வாசலில் இருக்க அப்பொழுது குறி பார்க்கும் பெண் வர உள்ளே அழைக்கிறார்.

அஞ்சலி பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்கிறார். குழந்தை உடல்நலம் சரியில்லாமல் பிறந்தால் என்ன செய்வாய் என்று கேட்க அதற்குள் அகிலன் வந்து விட அவரை வெளியே துரத்துகிறார்.கண்ணம்மா தனக்கு பிறந்த இரண்டாவது குழந்தை கண்டிப்பாக ஹேமாவாக தான் இருக்கும் என்று கூறுகிறார்.

அதனுடன் ஆட்டோ டிரைவர் வந்து கண்ணம்மாவிடம் கணவரை பற்றி விசாரிக்கிறார். மேலும் அவ்வளவு பெரிய பணக்கார குடும்பம் உன்னை தேடி இங்கே வர என்ன காரணம் என்றும் கேட்கிறார். கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here