பாரதி கண்ணம்மா அஞ்சலிக்குள்ளும் இப்படி ஒரு திறமையா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வரும் அஞ்சலி தற்போது தனது முழு திறமையையும் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையத்தில் அது ட்ரெண்டாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்வீட்டி. ஐடி துறையில் பணியாற்றி வந்த இவருக்கு டிக்டாக் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதுதான் இவரின் முதல் சீரியல். ஆனால் முதல் சீரியல் போன்றே இல்லாமல் தனது தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

அதனால் தான் அனைவர் மத்தியிலும் எளிதாக இடம் பிடித்தார். ஆரம்பத்தில் இவர் தான் வில்லியாக நடித்து வந்தார். பாரதியை அடைந்தே தீருவேன் என்று பல சதிகளை செய்து வந்தார். அதன் பிறகு இவருக்கு பரீனா வந்ததும் கதையே இல்லாமல் போனது. ஒரு சைடு கதாபாத்திரமாகவே நடித்து வந்தார்.

அடிக்கடி ஹேமாவை கொடுமைப்படுத்துவது போல காட்டப்பட்டது. இப்பொழுது இவர் கர்ப்பமாக இருக்கும் இந்த சூழலில் தான் இவரை வைத்து கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது. அஞ்சலி உயிர் பிழைப்பாரா?? மாட்டாரா? என்ற பல கேள்விகள் எழுந்து வருகிறது.

அஞ்சலிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதில் இருந்தே இன்ஸ்டாவில் அவருக்கு பாலோவர்ஸ் அதிகமாகி விட்டார்கள். இந்நிலையில் அவர் வாரணம் ஆயிரம் படத்தில் இடம் பெற்ற ‘அடியே கொல்லுதே’ பாடலை பாடுவது போன்று அழகாக ரீல்ஸ் செய்துள்ளார். இவர்க்கு இவ்வளவு திறமையா?? என்று பலரும் வியந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here