பிக் பாஸ் 5 இல் பாரதி கண்ணம்மா அகிலன்?? இணையத்தில் உலா வரும் தகவல்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான நிலையில் அதன் 5வது சீசனில் கலந்து கொள்ள போகின்ற பிரபலங்களின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. 100 நாட்கள் ஒரே வீட்டில் 15 போட்டியாளர்கள் எப்படி தங்கியுள்ளனர் என்பது தான் இதில் சுவாரஸ்யமே. மேலும் அதில் நடக்கும் சண்டைகள் கலாட்டாக்கள் அனைத்தும் மக்களின் ஆர்வத்தை தூண்டின.

bigg boss

முதல் சீசனில் ஓவியா அனைவர் மத்தியிலும் இடம் பிடித்தார். எப்படியும் அவர் சிறிது நாட்கள் தாக்கு பிடித்து கொண்டு இருந்து இருந்தால் கண்டிப்பாக டைட்டில் வின்னர் அவர் தான்.

ரித்திகா இரண்டாவது சீசனில் வெற்றி பெற்றார். மூன்றாவது சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். ஆனால் இந்த மூன்று சீசனையும் தூக்கி அடிக்கும் வகையில் வெற்றி பெற்றவர் தான் ஆரி. அவரின் குணம், பொறுமை அனைத்தும் மக்களுக்கு பிடித்து போக இறுதியில் மாபெரும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அடுத்த சீசன் பற்றிய ஆர்வம் அனைவர்க்கும் அதிகரித்து வருகிறது. அதில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பெயரும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மாஸ்டர் பட நாயகன் மகேந்திரா, லைலா, போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அகிலன் இதில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here