‘பாரதி கண்ணம்மா’ முக்கிய பிரபலம் கனாக்காணும் காலங்கள் சீரியலில் நடித்தவரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

விஜய் டிவியில் தற்போது கனாக்காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலம் அதில் கலந்து கொண்டுள்ளார்.

கனாக்காணும் காலங்கள் ரீயூனியன்

கனாக்காணும் காலங்கள் சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. ஆரம்பத்தில் பள்ளி வாழ்க்கையை முன்னிறுத்தி சீரியல் ஒளிபரப்பானது. ஒரு சராசரி மாணவன் தன் ஆசைகளை அடைய படும் கஷ்டமும், இலட்சியத்தை அடைய ஏற்படும் தடங்கலும் இந்த சீரியலில் வெட்டவெளிச்சமாக காட்டப்பட்டிருக்கும்.

அதனால் தான் இந்த சீரியல் டாப் ஹிட். அதன் பிறகு இரண்டாவது சீசனாக இரண்டு பள்ளிகளாக காட்டப்பட்டது. அதில் தான் ஸ்ரீ, பிரியா, மதன் போன்றோர் கலந்து கொண்டனர். அதன் பின் கல்லூரி சாலை என புதிய சீரியலை உருவாக்கினர்.

இதில் தான் செம்பருத்தி சீரியல் கார்த்திக், பிக் பாஸ் கவின், ரியோ போன்றோர் அறிமுகமானார்கள். இந்த சீரியல் மீண்டும் எடுக்கப்படாதா?? என ஏங்கி கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் தான் தற்போது கனாக்காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இதில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுடன் சேர்ந்து வைத்து பேசப்பட்ட வருண் இதில் கலந்துகொள்கிறார். அதாவது ‘நாம் இருவர் நமக்கிருவர்’ சீரியலில் நடிக்கும் கத்தி இதில் கலந்து கொள்கிறார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here