‘பாரதி கண்ணம்மா’ நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் லூட்டி – வைரலாகும் புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் இணைந்து செய்த லூட்டிகள் புகைப்படங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் முன்பை விட தற்போது விறுவிறுப்பான பல கட்டங்கள் நகர்ந்து கொண்டுள்ளது. இத்தனை நாட்கள் பாரதியும் கண்ணம்மாவும் சண்டை போட்டுக்கொண்டே இருந்ததை அடுத்து தற்போது ஓரளவிற்கு முன்னேறி சமாதானம் ஆகியுள்ளார்.

இத்தனை வருடங்கள் கழித்து முதன்முறையாக பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் சந்தோசமாக இருந்த நாட்களை நினைந்து பார்க்கிறார். திருமணம் ஆன நாளில் இருந்து தற்போது வரை கர்ப்பமான நாள் வரை சந்தோசமாக வாழ்ந்த நாட்களை நினைத்து வருந்துகிறார்.

மேலும் ஹேமா வேறு தன் அம்மாவின் பெயர் கண்ணம்மா தான் என்று கண்டுபிடித்து விட்டார். இனி அடுத்தடுத்து பல விஷயங்கள் வெளிவரப்போகிறது. அதற்கான முன்னோட்டமாக தான் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்த சீரியலில் இவர்கள் சண்டை போட்டு கொண்டாலும் நிஜத்தில் அனைவரும் நண்பர்கள் தான். மேலும் கலகலப்பானவர்கள் கூட. தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செய்த லூட்டிகள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here