வங்கி பயனர்களே கவனம்., வேலை நிறுத்தத்தால் 5 நாட்கள் முடங்கும் சேவைகள்! வெளியான ஷாக் நியூஸ்!!

0
வங்கி பயனர்களே கவனம்., வேலை நிறுத்தத்தால் 5 நாட்கள் முடங்கும் சேவைகள்! வெளியான ஷாக் நியூஸ்!!
வங்கி பயனர்களே கவனம்., வேலை நிறுத்தத்தால் 5 நாட்கள் முடங்கும் சேவைகள்! வெளியான ஷாக் நியூஸ்!!

வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.30 & 31 ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முடங்கும் சேவைகள் :

நாடு முழுவதும் பெரும்பாலான பயனர்கள், தங்களின் பணப்பரிவர்த்தனை குறித்து சேவைகளுக்காக தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில், நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

நிச்சயம் முடிந்த கையோட வருங்கால மனைவியை திருப்பதிக்கு அழைத்து சென்ற ஆனந்த் அம்பானி .., வெளியான புகைப்படங்கள்!!

குடியரசு தினமான இன்றைய விடுமுறைக்கு பின், நாளை ஒரு நாள் மட்டுமே வங்கி செயல்படும். அதன் பிறகு வாரத்தின் 4ம் சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் ஸ்டிரைக் போன்ற காரணங்களுக்காக தொடர்ந்து 5 நாட்கள் வங்கி சேவை முடங்க உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால்,தினசரி வங்கி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தற்போது, இந்த ஸ்டிரைக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி, விரைவில் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here