ஏடிஎம் இயந்திரம் கயிறு கட்டி இழுத்து கொள்ளை – திரைப்பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்!!

0

தெலுங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி இழுத்து சென்று அதில் உள்ள பணத்தை திருடியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

தெலுங்கானா

தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை ஆகிய தவறான சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசாரும் அரசும் சேர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவை அனைத்தும் பலனில்லாமல் தான் போகிறது. தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ஓர் அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அதிலாபாத் டவுனில் ஓர் ஏடிஎம் இயந்திரம் இயங்கி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை அடையாளம் தெரியாத சில முகமூடி திருடர்கள் கயிறு கட்டி இழுத்து சென்று திருடியுள்ளனர். இதுகுறித்து விசாரித்த போலீசார் இந்த திருட்டு வேளையில் நான்கு பேருக்கும் மேல் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும் போலீசார் தரப்பில் எவ்வளவு பணம் ஏடிஎம் இயந்திரத்தில் உள்ளது என்று தெரியவில்லை என்று தெரிவித்தனர். ஆனால் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை இயந்திரத்தில் இருக்கும் என்று வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகமூடி கொள்ளையர்கள்

மேலும் இதுகுறித்து தெரிவித்த போலீசார் கூறுகையில், நள்ளிரவில் நான்கு பேர் அடங்கிய முகமூடி திருடர்கள் டவேரா காரில் நோட்டமிட்டுள்ளனர். அவர்களது திட்டம் நகை கடையை கொள்ளை அடிப்பதாக தான் இருந்திருக்கும், ஆனால் அங்கு தற்போது போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதால் தான் ஏடிஎம் இயந்திரத்தி திருடி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

திடீரென உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

சிசிடிவில் ஒருவர் மட்டுமே இயந்திரத்தை கயிறு காட்டி இழுத்து சென்றுள்ளதாக பதிவாகியுள்ளது. கயிறு கட்டி இழுக்கப்பட்ட இயந்திரத்தை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்து சென்று அங்கு வைத்து இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். தற்போது இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைத்துளோம் என்றும் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்றும் அதிலாபாத் டி.எஸ்.பி வெங்கடேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here