மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – அதிர்ச்சியில் மக்கள்!!

0

புது மாதமான மே மாத பிறப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. இந்நிலையில் மே மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வங்கி விடுமுறை:

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் வங்கிகள் அனைத்தும் தகுந்த கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை சேவையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வங்கிகளின் நேர அமைப்பை குறைப்பதற்கு இந்திய வங்கிகள் சங்கம்(IBA) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் புதிய மாதமான மே மாதம் பிறக்கவுள்ளது. தற்போது மே மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மே மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை அன்று அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என்பது வழக்கம்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – ஒரே நாளில் 3,52,991 பேருக்கு தொற்று உறுதி!!

இதன் காரணமாக மே மாதம் 8 மற்றும் 22ம் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை. மேலும் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே மாதம் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. மீதமுள்ள 5 நாட்கள் நாடு முழுவதுமுள்ள வங்கிகள் அல்லாமல் அந்தந்த மாநிலங்களுக்கேற்ப விடுமுறை அளிப்பட்டுள்ளது. இதனை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here