மேலும் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – அவதியில் மக்கள்!!

0

இந்திய முழுவதும் வங்கிகள் வார விடுமுறை மற்றும் இரண்டு நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக கடந்த வாரம் 4 நாட்கள் தொடர்ந்து மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 7 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள்:

கடந்த பிப்ரவரி மாதம் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்க முடிவு செய்த்தனர். இதற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசு வங்கி ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் மத்திய அரசை கண்டித்து கடந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் காசோலை பரிவர்த்தனை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதன்பின்பு கடந்த புதன்கிழமை முதல் வங்கி ஊழியர்கள் வழக்கம் போல் தங்களது வேலையை தொடர்ந்தனர். இந்நிலையில் மீண்டும் வங்கிகளுக்கு 7 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்போவதாக தெரிகிறது. காரணம் வருகிற 27 மற்றும் 28ம் தேதி கடைசி சனி மற்றும் ஞாயிற்று கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை. பின்பு வருகிற 29ம் தேதி ஹோலி பண்டிகை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் வருகிற 1ம் தேதி நிதியாண்டில் கடைசி நாள், பின்பு ஏப்ரல் 1ம் தேதி வங்கி கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 4ம் தேதி ஞயாற்று கிழமை. எனவே வங்கிகளுக்கு மேலும் 7 நாட்கள் விடுமுறை விடவுள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். மேலும் காசோலை பரிவர்த்தனை, மற்றும் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும் என்று எதிர்பார்ப்படுகிறது. இந்த தகவலினால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here